என் மலர்
நீங்கள் தேடியது "car fire"
- சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
- தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
போரூர்:
சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு சாலையோரம் கார்கள் அடுத்தடுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அங்கிருந்த ஒரு காரில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவி கார் கொளுந்து விட்டு எரிந்தது.
- நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 52).
இவர் இன்று அதிகாலை மோகனூருக்கு தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லிபாளையம் பகுதியில் காருக்கு கியாஸ் நிரப்பி விட்டு இயக்க முயன்றபோது, கார் இயங்கவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் காரை தள்ளிக்கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் இருந்து குபுகுபுவென தீப்பிடித்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ பரவியது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரை அங்கு நிறுத்தி விட்டு, அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் தொலைவில் நின்று கொண்டு இது பற்றி நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும் சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவி கார் கொளுந்து விட்டு எரிந்தது. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகில் யாரும் செல்லவில்லை. வாகன ஓட்டிகள், தங்களது கார்களை சற்று தொலைவிலேயே நிறுத்திக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பழனி:
பழனி அருகே உள்ள கொழுமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் இன்று காலை தனது வேலை நிமித்தமாக காரில் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென அவரது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்ததும் சாலையில் சென்றவர்கள் சத்தம் போட்டு அவருக்கு தெரிவித்தனர். உடனே காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருந்தபோதும் இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் திருமண மண்டபம் அருகே நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கார் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
- வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தீயை அணைத்தனர்.
வேடசந்தூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனாரான பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார் கீதா(66) என்பவரும் வந்தார்.
காரை சாந்தப்பன்(33) என்பவர் ஓட்டிவந்தார். இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தலைகுப்புற கவிழ்ந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். பொன்னம்பலம் இடுப்பிற்கு கீழே பலத்த தீக்காயமடைந்து அவரது 2 கால்களும் கருகியது. டிரைவர் சாந்தப்பனுக்கும் முழங்காலுக்கு கீழே தீக்காயம் ஏற்பட்டது.
சந்தோஷ்குமார் மற்றும் கீதா லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.
மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஸ்டார்ட் செய்ய முயற்சித்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவர் சென்னையில் போலீசாக வேலை செய்து வருகிறார்.
இவரது கார் வீட்டின் அருகே பயன்படுத்தப்படா மல் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜ்குமாரின் மகன் நேற்று காலை காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப் போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய குமார் தலைமையில் பாண்டியன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
- கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.
- காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
திருப்பதி:
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர்.
ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.
இதனை கண்டு திடுக்கிட்ட சுந்தரராஜ் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சரி செய்ய முயன்றார்.
காரில் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுந்தரராஜ் அசம்பாவித சம்பவம் நடக்கப் போவதாக எண்ணினார். தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.
அவரது குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி ஓடினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே திடீரென காரில் பெரிய அளவில் தீ பரவியது.
அவர்கள் கண்முன்னே கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
சுந்தர்ராஜ் தனது குடும்பத்தினரை முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து உடனடியாக வெளியேற கூறியதால் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் நகரி சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
- தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
- பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.
புதுச்சேரி:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் குணாளன். இவர் தனது மனைவியுடன் சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து அவரது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு புதுவைக்கு வந்தார்.
புதுவையில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள கப்ஸ் தேவாலயம் அருகில் காரை நிறுத்தி இறங்கினர். அப்போது காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை பார்த்த பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மேலும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த காரின் உட்புறம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டபோது குணாளனும் அவரது மனைவியும் காரை விட்டு இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
- ஓடும் காரில் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார்.
- தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
வாழப்பாடி:
சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் முன்பகுதி தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது.
ஓடும் காரில் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார். இதையடுத்து 5 பேரும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் கார் என்ஜின் வெடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். அதன் அருகில் யாரும் செல்லவில்லை.
தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பிடித்து எரிந்ததில் கார் முழுவதும் எலும்பு கூடாக காணப்பட்டது. பின்னர் அந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்-சென்னை பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் அந்த பகுதியில் வெகுநேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
- டிரான்ஸ்பார்மர் வெடித்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பள்ளிமுக்கு-கண்ணமூலா ரோட்டில் பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் டிராான்ஸ்பார்பர் தீப்பிடித்து எரிந்தது. மேலும் டிரான்ஸ்பார்மரில் பிடித்த தீ, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களுக்கும் பரவியது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் அந்த பகுதியில் வெகுநேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். தொழிலதிபரான இவர் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளார்.
இவர் அகமது என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நீரஜ் தனது ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து நீரஜின் நண்பரான அமன் என்பவர் கார் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.
இதனை கண்ட அகமது அது நீரஜ்ஜின் கார் என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அமனை தொடர்பு கொண்டு நான் காரை வாங்க விரும்புகிறேன்.
மாமிட் பள்ளி கிராமத்தில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு வருமாறு கூறினார். அதன்படி அமன் காரை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றார்.
அப்போது அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். காரை அங்குள்ள சாலைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அகமது தனக்கு நீரஜ் 1 கோடி ரூபாய் கடன் தர வேண்டும். அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கேட்டார். இதனால் அமனுக்கும் அகமதுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அகமது காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. ஒரு கோடி ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பஹடி ஷரீப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.