search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against"

    • வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
    • இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கரூர் :

    கூடுதல் வரதட்சைணக் கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர், வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 27). இவருக்கும், நாமக்கல் மாவட்டம், நல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமராஜ் (32) என்பவருக்கும் கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    நந்தினி திருமணத்தின் போது, ராமராஜிக்கு வரதட்சனையாக ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் 18 பவுன் நகை கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் ராமராஜ் தனது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணையாக ரூ.2 லட்சம், 10 பவுன் நகை வாங்கி வரவேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து சித்திரவதை செய்ததாக தெரிகிறது. இதற்கு ராமராஜின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, நந்தினி அளித்த புகாரின்பேரில், கணவன் ராமராஜ், அவரது தந்தை சுப்பையா, தாய் சரோஜா மற்றும் உற வினர்கள் விமலா, ரேவதி ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆடுகளை கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டி மேலூரைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது ஆடுகள் பெரியவீரன், சின்னவீரன் என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில் போய் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் குருணை மருந்து வைத்துள்ளனர்.

    அதனை தின்ற 10 ஆடுகள் இறந்து விட்டன. இதுபற்றி அய்யனார் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் ரூ. 58 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). தனியார் வங்கி மேலாளர்.இவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது வங்கியில் விருமாண்டி, மனைவி ஆல்பின் ஸ்டெபி ஆகியோர் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக, ரூ. 17 லட்சத்து 94 ஆயிரம் கடன் வாங்கினர். அந்த பணத்தில் அவர்கள் நகையை திருப்பி விட்டனர்.

    இருந்தபோதிலும் வங்கியில் கடனாக வாங்கிய ரூ.17 லட்சத்து 94 ஆயிரத்தை திருப்பி செலுத்தவில்லை. போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 40 லட்சம் மோசடி

    திருச்சி மாவட்டம் புத்தூர், ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்தவர் தங்கராஜன் (63). இவர் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தொழில் அபிவிருத்திக்காக என்னிடம் ரூ.40 லட்சம் கடன் வாங்கினார்.

    அதனை அவர் குறித்த காலத்தில் திருப்பி தரவில்லை. நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அவர் தர மறுத்து அவதூறாக பேசினார். போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரை சரமாரியாக தாக்கிய 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அர்ச்சுனா நதி படுகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை கொட்டகை உரிமையாளர் ராமதாஸ் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதில் ஏற்பட்டுள்ள வாக்குவாதத்தில் ராமதாஸை அந்த கும்பல் தாக்கியது. இதை தடுக்க வந்த விக்ரம் என்பவரும் தாக்கப்பட்டார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் விசரணை நடத்தி நெல்லையை சேர்ந்த அய்யப்பன், குமரேசன், ராகுல், வெள்ளைபாண்டி மற்றும் 6 பெண்கள் உள்பட 26 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • புகையிலை பொருட்களை விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மளிகை கடை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வி.களத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரது கடையில் நடத்திய சோதனையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லோகேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வெற்றிவேல், முருகன், செல்வன் ஆகிய 3 பேர் விவசாயி முருகனை தாக்கியுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சின்னையா புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாயி. இவர் தோட்டத்தில் தென்னை ஓலை பின்னும் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதை தொடர்ந்து வெற்றிவேல், முருகன், செல்வன் ஆகிய 3 பேர் விவசாயி முருகனை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மச்சக்காரப்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt #CauveryWater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன.

    இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    இந்த கழிவுகளால் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறது.

    எனவே காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை என்றும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள்தான் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #CauveryWater
    ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Jayalalithaa
    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்டக்கூடாது. அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படம் வைக்கக்கூடாது. அரசு நலத்திட்டங்களுக்கு அவருடைய பெயர் சூட்டக்கூடாது என்று தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், டிராபிக் ராமசாமி, வக்கீல் துரைசாமி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்குகள் கடந்த ஏப்ரல் 2-ந் தேதி விசாரணைக்கு எடுத்தபோது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை திரும்பப் பெற்று, இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினர். வருகிற 8-ந்தேதி வழக்குகளை விசாரிப்பதாக உத்தரவிட்டனர். 
    அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. #Jayalalitha #Memorial
    சென்னை:

    ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சட்டவிரோதமாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.



    மேலும் அந்த மனுவில், ‘அடிக்கல் நாட்டு விழாவுக்காக மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பேனர்கள் அவைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற சென்ற என்னை அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினார்கள். அப்போது தாக்குதலை தடுக்காமல், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்தனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. #Jayalalitha #Memorial 
    ×