என் மலர்
நீங்கள் தேடியது "case filed"
- கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார்.
- என்ஜினீயரிங் மாணவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.
ஆலந்தூர்:
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கதவை திறந்து சர்ச்சையில் சிக்கினார். இதே போல் மேலும் சில சம்பவங்கள் நடந்தன.
இதைத் தொடர்ந்து விமானத்தின் அவசர கதவு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் மீது விமான நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.
இதனை கவனித்த விமான பணிப்பெண்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இதுபற்றி விமான கேப்டனிடமும் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் மாணவரின் செயல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக அந்த மாணவர் கூறும்போது, "நான் விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யவில்லை. அதன் கைப்பிடியை தொட்டுப் பார்த்தேன்" என்றார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்றதாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மாணவர் கைது செய்யப்படவில்லை" என்றனர்.
- பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வந்த ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரை போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள நாகசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தந்தை, கணவர் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகேயுள்ள எருமையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது 15 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு எச்.புதுபட்டியை சேர்ந்த கலைஞன் (வயது 25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கர்ப்பிணியான அந்த சிறுமி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.
அதன்பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை சின்னசாமி, கணவர் கலைஞன், மாமியார் காந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகராஜ் வீட்டின் மாடி அறையில் தனது கையில் மின்வயரை சுற்றிக்கொண்டு சுவீட்சை போட்டார்.
- தற்கொலை குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியபுளியம்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது மகன் சண்முகராஜ் (வயது 37). தொழிலாளியான இவருக்கு திருமணமாகிவிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சண்முகராஜ் விரக்தியில் இருந்துள்ளார். அடிக்கடி தனது தாயாரிடம் தனது மனைவியை சமரசம் செய்து சேர்த்து வைக்கும்படி கூறி உள்ளார்.
இதுகுறித்து பலமுறை மல்லிகாவும் பேசி உள்ளார். ஆனால் மருமகள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகராஜ் வீட்டின் மாடி அறையில் தனது கையில் மின்வயரை சுற்றிக்கொண்டு சுவீட்சை போட்டார். இதில் கண்ணி மைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சண்முக ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி ஆயில் மில் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் காளிமுத்து (35). ஆட்டோ டிரைவரான இவர் அடிக்கடி மது குடித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டின் மாடியில் காளிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சமுதாய கூட்டுறவு சங்க நிர்வாகி சதீசன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆலப்புழாவை அடுத்த சேர்தலா பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் சதீசன் (வயது 66).
இவர் அந்த பகுதியில் உள்ள சமுதாய கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இந்த சங்கத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது தலித் சிறுமி சென்றார்.
அங்கு சென்ற வந்த பின்பு சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார். சிறுமி படித்த பள்ளியில் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டபோது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. அவரை சமுதாய கூட்டுறவு சங்க நிர்வாகி சதீசன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கம்யூனிஸ்டு நிர்வாகி சதீசன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சேகர்(வயது43) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியலில் இருந்த ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேகர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் போலீஸ் சரகம் உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ஜான்சி (34). இவரது தோட்டத்திற்குள் அதே ஊரைச் சேர்ந்த தவமணி என்பவரின் ஆட்டுக்குட்டி நுழைந்தபோது அதனை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவமணி மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் ஜான்சியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜான்சி கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- ரஷ்ய பெண் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆகிலை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கூராச்சுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆகில் (வயது 26).
இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் ரஷ்யாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்தப் பெண் முகமது ஆகில் அழைப்பின் பேரில் கேரளா வந்துள்ளார்.
அதன்பிறகு 2 பேரும் கத்தார், நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கோழிக்கோடு திரும்பினர். கூராச்சுண்டுவில் உள்ள முகமது ஆகில் வீட்டில் அவர்கள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் ரஷ்ய பெண் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற விசாரணையில், முகமது ஆகிலுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் முகமது ஆகில், கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தாக்கியதாகவும் ரஷ்ய பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆகிலை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொயிலாண்டி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- டேனியல் செல்வராஜ் அனுப்பிய போலி கடிதம் குறித்து மணிகண்டன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் கூறி மிரட்டியுள்ளார்.
- மணிகண்டன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரி:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் டேனியல் செல்வராஜ் (வயது 25).
இவர் தருமபுரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் தனியார் ஏஜெண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்டர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இந்த விளம்பரத்தை நம்பி டேனியல் செல்வராஜுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது டேனியல் செல்வராஜ் மாலத்தீவில் 100 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.இதற்கு முன் பணமாக ரூ. 1 லட்சமும், மீதி பணம் விசா வந்தவுடன் ரூ.2 லட்சம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மணிகண்டன் பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கி டேனியல் செல்வராஜூ வங்கி கணக்கிற்கு ரூ.19 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
இதே போல் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் நடராஜ் என்பவரும் ரூ.1.5 லட்சம் அனுப்பியுள்ளார். இவர் மொத்தமாக பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது.
பின்னர் இவர் நிறுவன கடிதம், மற்றும் விசா அனைத்தையும் இவர்களுக்கு அனுப்பி உள்ளார். அப்போது சோதனை செய்து பார்த்ததில் இவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.
டேனியல் செல்வராஜ் அனுப்பிய போலி கடிதம் குறித்து மணிகண்டன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து மணிகண்டன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் நகரசபை தலைவர் ராமலெட்சுமி பதவி விலக வேண்டும் என்று கூறினர்.
- ராமலெட்சுமி செங்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சுடர் ஒளிவு, முத்துபாண்டி, ராம்குமார் ஆகியோர் திடீரென எழுந்து நகரசபை தலைவர் ராமலெட்சுமி தங்களது வார்டுகளில் பணிகளை நிறைவேற்றி தரவில்லை. எனவே பதவி விலக வேண்டும் என்று கூறினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராமலெட்சுமி செங்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கவுன்சிலர்கள் சுடர் ஒளிவு, முத்துப்பாண்டி, ராம்குமார் ஆகிய 3 பேர் மீதும் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சுடர்ஒளிவு புகாரில், தலைவர் ராமலெட்சுமி, கவுன்சிலர் பேபி ரஜத் பாத்திமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர் என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த "ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர்" என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பார்த்து வந்த அருள் என்பவரிடம் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
இதனைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார்.
- தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு பகுதியைச் சேர்ந்தவர் செண்பகாதேவி (வயது 31). இவருக்கும் மதுரை சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் ராகேஷ் என்பவருக்கும் கடந்த 10.3.2013-ல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார் சார்பில் 50 பவுன் நகை, மணமகனுக்கு 7 பவுனில் தங்க செயின், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய புதுமண தம்பதியினரின் மணவாழ்க்கை காலப்போக்கில் கசக்க தொடங்கியது.
இதற்கிடையே ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்த ராகேஷ் சொந்தமாக தொழில் செய்ய நினைத்தார். இதற்காக மனைவியிடம் அவர்களது வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கூறினார்.
உடனடியாக செண்பகாதேவி, தான் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் தொழில் செய்வதற்காக கழற்றி கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட ராகேஷ் எந்தவிதமான தொழிலும் தொடங்க முன் வரவில்லை. இதுபற்றி மனைவி கேட்டபோது, அந்த நகை அனைத்தையும் தனது தங்கை சுதாவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு உருவானது. கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராகேஷ் மனைவி செண்பகாதேவியை தனி அறையில் அடைத்துவைத்து சாப்பாடு கூட தராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் இந்திரா மற்றும் சகோதரி சுதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பின்னர் செண்பகாதேவியை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளனர். தனது தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் ராகேஷ், மாமியார் இந்திரா, நாத்தனார் சுதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.