என் மலர்
நீங்கள் தேடியது "case filed"
- ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர் என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த "ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர்" என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பார்த்து வந்த அருள் என்பவரிடம் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
இதனைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார்.
- தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு பகுதியைச் சேர்ந்தவர் செண்பகாதேவி (வயது 31). இவருக்கும் மதுரை சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் ராகேஷ் என்பவருக்கும் கடந்த 10.3.2013-ல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார் சார்பில் 50 பவுன் நகை, மணமகனுக்கு 7 பவுனில் தங்க செயின், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய புதுமண தம்பதியினரின் மணவாழ்க்கை காலப்போக்கில் கசக்க தொடங்கியது.
இதற்கிடையே ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்த ராகேஷ் சொந்தமாக தொழில் செய்ய நினைத்தார். இதற்காக மனைவியிடம் அவர்களது வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கூறினார்.
உடனடியாக செண்பகாதேவி, தான் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் தொழில் செய்வதற்காக கழற்றி கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட ராகேஷ் எந்தவிதமான தொழிலும் தொடங்க முன் வரவில்லை. இதுபற்றி மனைவி கேட்டபோது, அந்த நகை அனைத்தையும் தனது தங்கை சுதாவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு உருவானது. கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராகேஷ் மனைவி செண்பகாதேவியை தனி அறையில் அடைத்துவைத்து சாப்பாடு கூட தராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் இந்திரா மற்றும் சகோதரி சுதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பின்னர் செண்பகாதேவியை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளனர். தனது தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் ராகேஷ், மாமியார் இந்திரா, நாத்தனார் சுதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த பாலையூர் அருகே கோமல் கிராமத்தில் ஊராட்சி தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன்.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாண்மையாக இருந்தபோது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாக கூறி அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மண்டபம் கட்டுமான பணிக்கு செய்யப்பட்ட செலவை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு கிராமமக்கள் கணக்கு கேட்டதாகவும், அதற்கு பாலசுப்பிரமணியம் உரிய கணக்கு காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாண்மை பொறுப்பில் இருந்து கிராமமக்கள் நீக்கியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அவரது வீட்டின் கொல்லையில் நேற்று முன்தினம் மண் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கோமல் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 60), குணசேகர் (43) ஆகியோர் தட்டிக்கேட்டனர். பின்னர், இதுகுறித்து பாலையூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் 15 பேர் நேற்று அரிவாள், உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றை கொண்டு செல்வராஜ், குணசேகர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்த உறவினர்கள் அனைவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
- பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில் அலுவலகம் வைத்து ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார்.
இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து உடன்படிக்கும் மாணவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவர் இது பற்றி பயிற்சியாளர் சத்திய மூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி அந்த மாணவரிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்தியமூர்த்தி, மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் சத்திய மூர்த்தியின் பாலியல் சில்மிஷம் குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நேற்று மாலை சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு சத்தியமூர்த்தியை அவர்கள் அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார்.
இந்நிலையில் சத்தியமூர்த்தியின் அலுவலகம் முன்பு திரண்ட மாணவ-மாணவிகள், உறவினர்கள் சத்தியமூர்த்தியை கைது செய்ய கோரி வலியுறுத்தி கோஷமிட்டனர். கைது செய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.
இந்நிலையில் சூரம்பட்டி போலீசார் ஆடிட்டர் சத்தியமூர்த்தி மீது 506 (2) மிரட்டல் விடுப்பது, 294 (பி) கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஆடிட்டர் சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் இன்று மாலை அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் காரிமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து மாணவி இன்று காரிமங்கலம் போலீசில் நாகனுரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 26) மற்றும் அவரது உறவினர்களான வள்ளி (45), சின்னராஜ்( 55), லட்சுமி ( 40), ஜமுனா ( 45), நவீன் ( 28) ஆகிய 6 பேர் மீது காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- ஒரு கட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மன்சூர்(வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் நெல்லை மாநகர இந்து முன்னணி பேட்டை நகர துணைத்தலைவராக உள்ளார்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே பேட்டை செக்கடி பகுதியில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு இந்த பிரச்சனை தொடர்பாக டவுன் காட்சி மண்டபம் அருகே 2 தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.
அப்போது அந்த வழியாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. இதில் கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அய்யப்பனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட கவுன்சிலர் தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காயம் அடைந்த அய்யப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை டவுன் போலீசார் மீட்டு ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அய்யப்பன் அளித்த புகாரின்பேரில், ஆயுதம் கொண்டு தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பேட்டை சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது 3 பிரிவுகளில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பிரச்சனையில் தொடர்புடைய கவுன்சிலர் ஷேக் மன்சூரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி நிர்வாகி அய்யப்பனை இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
- பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது மணிமேகலைக்கு பண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மணிமேகலை வேலையில் இருந்து நின்று விட்டார்.
இருப்பினும் வேலைக்கு வர சொல்லி பாண்டியன் அவரை நிர்பந்தம் செய்து வந்தார். ஆனாலும் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் பாதிக்கப்பட்ட மணிமேகலை, பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால கிருத்திகா என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
- காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.
- சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சமூக நலத்துறை அதிகாரி சாந்தி என்பவருக்கு காரிமங்கலம் ஊர்கவுண்டர் கொட்டாய் என்ற இடத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு விசாரணை மேற்கொண்ட பெண் அதிகாரி சம்பவம் உறுதியானதை அடுத்து அது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கும் தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை மாதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 27) என்பவருக்கும் பண்ணத்தூர் தேவிர அள்ளி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மகளிர் சமூக நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் பிரகாஷ் சிறுமியின் தந்தை, சிறுமியின் தாய் மற்றும் மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா, நஞ்சம்மாள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
- டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
- பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜா் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
ஏற்கனவே கடைக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடையின் வழித்தடத்தில் அமா்ந்திருந்ததாக குற்றம்சாட்டி அந்த பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடா்ந்து, மாநகராட்சி உதவி ஆணையா் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் முன் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடைக்கு 'சீல்' வைத்தனா்.
மேலும் திருப்பூர் தெற்கு போலீசார் கடையின் டீ மாஸ்டர் அனில்குமார், ஊழியர் வெங்கடேஷ் ஆகிய 2பேர் மீது, பொது இடத்தில் பெண்களை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
- 3 பேர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 24-ந் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்ற இடத்தையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தின் போது சிலர், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை கட்டி இருந்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவியது.
இதையடுத்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகிய 3 பேர் பாலஸ்தீன கொடியை மேம்பாலத்தின் மீது கட்டியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
- வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அதன் மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இந்த உண்மை வங்கியில் நடைபெற்ற தணிக்கை பணியின் போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்தையும் தனது மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
அவ்வாறு கிடைத்த பணத்தை கொண்டு சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் மீதும் அவருக்கு உதவியதாக லட்சுமணன், சியர்ல தினா சுமதி ஆகிய 3 பேர் மீதும் கிளை மேலாளர் பெருகினியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
- மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.
மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.