search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cattle catch"

    • மாநகராட்சி நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. நாளுக்கு நாள் மாடுகள் சுற்றித்திரியும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து மாடுகளை அதன் உரிமையாளர்கள் வெளியே அவிழ்த்து விடுகின்றனர்.

    இதற்கிடையில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுத்திரிந்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் இன்று காலை 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பழைய பஸ்நிலையத்தில் சுற்றி திரிந்த 5 மாடுகளை ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். பிடிபட்ட மாடுகளை கோட்டை பின்புறம் உள்ள கோசாலாவில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட உள்ளது என்றும் மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம்
    • பொதுமக்களின் புகாரின் பேரில் நடவடிக்கை

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, காந்தி சாலை, சன்னதி தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

    இதனால் பள்ளி மாணவர்கள் முதியோர்கள் பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போது மாடுகள் முட்டி கீழே தள்ளுகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தனர்.

    நகராட்சி அதிகாரிகள் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    • ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும்
    • மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 14-வது வார்டுக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மெயின் ரோடு மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.

    செல்பவர்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி விபத்து ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்படி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    பிடிக்கப்பட்ட மாட்டின் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மாநகராட்சிக்கு அபராதமாக கட்ட வேண்டும், பணம் கட்ட தவறினால் கோட்டை சுற்று சாலையில் உள்ள ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ×