search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் பிடிப்பு
    X

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் பிடிப்பு

    • மாநகராட்சி நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. நாளுக்கு நாள் மாடுகள் சுற்றித்திரியும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து மாடுகளை அதன் உரிமையாளர்கள் வெளியே அவிழ்த்து விடுகின்றனர்.

    இதற்கிடையில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுத்திரிந்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் இன்று காலை 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பழைய பஸ்நிலையத்தில் சுற்றி திரிந்த 5 மாடுகளை ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். பிடிபட்ட மாடுகளை கோட்டை பின்புறம் உள்ள கோசாலாவில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட உள்ளது என்றும் மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×