search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebration of Onam"

    • வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
    • பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சியடைந்தனர்.

    ஊட்டி,

    கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியிலும் இந்த பண்டிகை களை கட்டத் தொடங்கி உள்ளது.

    கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

    குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் அதிக அளவில் கேரளா மாணவிகள் படித்து வருவதால் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அருட்தந்தை விமல் திருப்பலி நடத்தி ஓணம் பண்டிகை விழாவை தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பட்டாசு வெடித்தும், திருவாதிரை களி நடனமாடியும் ெசண்டை மேளம் முழங்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அனைத்து பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    ×