என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cement road"
- கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை ஈஸ்வரன் கோவில் தோப்புப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை கடந்த ஆகஸ்டு மாதம் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தற்போது இப்பணி நடைபெற்று வருகிறது. இதனை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் தற்போது மழைக்காலம் என்பதால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், அர்த்தனாரி, பிரபாகரன், மன்சூர், இருதயராஜ், ராகேஷ், பஸ்கல், ரகுமான், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
- அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக உள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இதில் மங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டு, குழியுமாக காணப்பட்டது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று என்.என்.டி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
- எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்துவிட்டனர்.
கடலூர், செப்.26-
கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினருடன் வந்தார். பின்னர் மனு கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தபோது பெட்ரோல் கேன் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர்.
அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்திய போது, விருத்தாச்சலம் முதனை கிராமத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பது தெரிய வந்தது.அவர் போலீசாரிடம் கூறியதாவது:-எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்து விட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சிமெண்ட் சாலை அமைத்த இடம் எங்க ளுக்கு சொந்தமான இடம். அதனால் அதிகாரிகள் உரிய அளவீடு செய்து நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்கள் இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். பின்னர் தாசில்தார் பலராமன் அந்த வாலிபரி டம் இருந்த மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது
கலவை:
மேல்விஷாரம் நகராட்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் அஞ்சுமன் தெரு மற்றும் பெரிய மசுதி தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
இதற்கான கல்வெட்டினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
இதில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, நகரமன்றத் தலைவர் முஹமது ஹமீன், துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, நகராட்சி ஆணையாளர் (பொ) சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
- ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பெரப்பேரி ஊராட்சியில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், துணைத்தலைவர் சுமதி ஐயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- நிகழ்ச்சியில் தாசில்தார் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் ஊராட்சி தெற்கு காலனியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் ஜோசப்மோகன், தங்ககுமார், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, வர்த்தகர் அணி முத்துகுமார், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, புதியம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வி, ஊராட்சி செயலர் உத்திரகனி, கிளை செயலாளர்கள் சற்குனபாண்டி, பாலகுருசாமி, ராஜாவின் கோவில் கிளை செயலாளர் காளியப்பன், தொண்டரணி கோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதுச்சேரி நகராட்சி மூலம் உட்புற சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
உப்பளம் ெதாகுதி வாணரப்பேட்டை ஈஸ்வரன் கோவில் தோப்பு பகுதியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ் 21 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி நகராட்சி மூலம் உட்புற சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
இப்பணியினை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவ பாலன் , உதவி பொறியாளர் யுவராஜ், பரமானந்தன், பொதுப்பணித்துறை கணேசன் , தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில பிரதிநிதி கணேசன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் சந்துரு, காளப்பன் , மணி, பிரபாகரன், ராகேஷ், மகளிர் அணி குணசுந்தரி, மற்றும் ரகுராமன்,பஸ்கல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.9 லட்சத்தில் அமைகிறது
- பூமிபூஜை போடப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியூர் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
சாலையை மேம்படுத்தி தர வேண்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நேற்று பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் ரூ.54.36 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் கங்காரு தேங்காய் விதைப்பண்ணை நிலையத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் சுமதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, அண்ணா நகர் 3வது வார்டுக்கு உட்பட்ட ஆற்று பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
அதனை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டது.
அதேபோல், 15 வார்டுகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், அரசின் இலவச வீடு வழங்குதல், மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
மேலும், குடிநீர் பைப்புகளில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற 5 ம் தேதி முனீஸ்வரன் கோவில் கும்பா பிஷேகம் நடைப்பெ றுவதால் அதற்கான சாலையை சீரமைத்து தரவேண்டும். பக்தர்கள் வாகனத்தில் வரும் போது போக்கு வரத்துக்கு ஏற்றவாறு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சாலை அமைத்து தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உறுதியளித்தார்.
- அபிராமம் அருகே சிமெண்டு சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம். அபிராமம் அருகே உள்ள உடையநாதபுரம், பள்ளபச்சேரி, அம்பேத்கார் நகர், ஏ. புதூர், அருந்ததியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அம்பேத்கார் நகர் பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலைகளை சிமெண்டு சாலையாக மாற்றித் தர வேண்டும். தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தர வேண்டும். 2015-16-ம் நிதியாண்டில் கட்டப்பட்ட கழிவறை சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேலுவிடம் கேட்ட போது, இந்த பணிகளுக்கு ஏ.எஸ். கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றார்.
- ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு:
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், வட தண்டலம் கிராமம் கன்னிகாபுரம் பகுதியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலையை நேற்று ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கவுன்சிலர் ஞானவேலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி செய்யாற்றை வென்றான் கிராமத்தில் வெறி நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியானதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளர் கலைமணி குடும்பத்தாருக்கு ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்