என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CEO Officer"
- நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, போத்தீஸ் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஸ்டார் கிட்ஸ் போட்டிகளை நடத்தியது
- நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, போத்தீஸ் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஸ்டார் கிட்ஸ் போட்டிகளை நடத்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் எஸ்.கிளிட்டஸ் பாபு, போத்தீஸ் பொதுமேலாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், குழந்தைகளின் திறமையை வளர்க்க வும்,அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர எங்களது கல்லூரி பெருமுயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறன் வளர்வதற்கு இந்த ஸ்டார் நிகழ்ச்சி பயன்படுகிறது என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பேசுகையில், மாணவர்கள் தங்கள் திறமைகளை பல்வேறு போட்டிகளின் மூலம் நிரூபித்து வெற்றி காண்கி றார்கள். இக்கல்லூரி மாணவர்கள் பெரிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து பிரதமர் பாராட்டை பெற்றுள்ளனர் என்றார்.
தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் ஓவியப் போட்டி, ரங்கோலி, கட்டுரை போட்டி, பாட்டு, நடன போட்டி, குழு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி பொது மேலாளர் கிருஷ்ண குமார், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியேல் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்