என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Champion"

    • புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
    • பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    சென்னை:

    மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவா அணி (ராம்-நிதின்) 21-18, 17-21, 15-9 என்ற செட் கணக்கில் மெரினா பீச் கிளப் அணியை (ராபின்-பரத்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், அரேபியன் கார்டன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கே.அப்துல் நபீல், மாநகராட்சி மண்டல சேர்மன் மதியழகன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம். அழகேசன் செயலாளர் மகேந்திரன், சேலம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
    • செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

    பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

    17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.



    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
    • இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

    பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து விளையாடினார்கள். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.

    இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் எனற மூன்று தளத்திலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபர் கார்லோஸ் அல்காரஸ் ஆவார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு யூ.எஸ் ஓபன் ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
    • தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    காங்கயம்:

    2022-2023-ம் ஆண்டிற்கான தாராபுரம் குறுமைய அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், காங்கயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குழு போட்டிகளில் 205 புள்ளிகள் பெற்று தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    தடகள போட்டியில் இந்த பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி 1,500, 800 மீட்டர் போட்டியில் முதலிடமும், 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-ம் இடமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஹரிஸ் குண்டெறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், கோகுல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும், ஹெர்மன் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவன் விங்கேஷ்வரன் வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்                சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவகுமார், ராம்கி ஆகியோரையும், பள்ளி தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவு முதலிடம் பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இதில் மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இளையோர் பிரிவில் சந்தோஷ், மூத்தோர் பிரிவில் பவேஷ், மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    பெண்கள் மூத்தோர் பிரிவில் கனிமொழி, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வட்டார அளவில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களை பள்ளி தாளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.



    • பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 307 மாணவ-மாணவிகள் கலந்துக் கொண்டு 217 மாணவ-மாணவிகள் அதிகப் போட்டிகளில் வெற்றிப்பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.

    வெற்றிப்பெற்ற மாணவர்களையும் சாரண-சாரணியர் அமைப்பின் நீண்டக் கால சேவைக்கான மாநில விருதினை பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து பெற்று வந்துள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் சாரண-சாரணிய ஆசிரியர் சுந்தர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், நிர்வாகக் குழுத் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் மற்றும் பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோரை பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    • தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று ஏ.வி.பி., பள்ளி வெற்றி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்து பந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கைப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், பூப்பந்து இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கேரம் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் பிரியாராஜா , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு , ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
    • 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சிஐஎஸ்சிஇ நியூ டெல்லி சார்பில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் பன்னாட்டு பள்ளி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சிஐஎஸ்சிஇ பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளியில் இருந்து 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், சம்ரிதா 26 கிலோ பெண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், தர்ஷன் 60 கிலோ ஆண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், பக்கா லோகேஸ்வர் ரெட்டி 60 கிலோ மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் விஷ்ணு ராம் 55 கிலோ எடை பிரிவு, ராகினி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். ஆசிரா 46 கிலோ எடைப்பிரிவு, வருனேஷ் 45 கிலோ எடை பிரிவு,

    சந்தோஷ் 40 கிலோ எடை பிரிவு, கமலேஷ் 50 கிலோ எடைபிரிவு, பிரணவ் 35 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடை பிரிவிலும் ,ஏகநாதன் 45 கிலோ எடை பிரிவிலும், நவ்ஷத் 66 கிலோ எடை பிரிவிலும், வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    லீனா ஸ்ரீ 14 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

    கலந்து கொண்ட பதினைந்து பேர்களில் 14 பேர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கல, பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த தோடு 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஓவரால் சாம்பிய ன்ஷிப்பும், பெற்று தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்கள் அனை வரும் ஹயாஷிகா கராத்தே கழகத்தின் தஞ்சை செயலாளர் மற்றும் பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் மற்றும் கராத்தே பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தாளாளர் திரு ஜெரால்ட் பிங்னோரா ராஜ் மற்றும் பள்ளியின் இயக்குனர் திருமதி ரபேக்கா , பள்ளியின் முதல்வர் திருமதி விஜயலட்சுமி' ஆகியோர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

    தங்கப்பதக்கம் வென்ற விஷாலினி, சம்ரிதா, தர்ஷன், பக்கா லோகேஸ்வர் ரெட்டி ஆகியோர் அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வா கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    • பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது.
    • 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, அப்புவிளை மகேசுவரன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தனர்.

    பெண்கள் பிரிவு போட்டியை ராதாபுரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழவந்தகணபதி, பொன் மீனாட்சி அரவிந்தன், சாந்தா மகேசுவரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் தூத்துக்குடி துரைசிங்கம் அணியை தானே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் கன்னியாகுமரி அணியை சென்னை வருமான வரித்துறை அணி வென்றது. 3-வது போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் எதிர்நீச்சல் அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்றது.

    பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது. 3-வது போட்டியில் சாய் அணியை ஹரியானா அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் பெங்களூரு அணியை மங்களூரு அணி வென்றது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் தானே அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் டெல்லி அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் மங்களூரு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் சுழற்–கோப்பை பரிசு வழங்கினர். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய குழு துணைத்தலைவர் இளையபெருமாள், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், சாலமன் டேவிட், இசக்கிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாம்பியன் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து பெற்றனர்.
    • பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

    வாடிப்பட்டி

    மாநில அளவிலான பாராமெடிக்கல் கல்லூரிகளுக்கு இடையே நாடகம், கவிதை, ஓவியம், தனித் திறன் மற்றும் கருத்தரங்கு, ஆய்வரங்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

    இதில் தமிழகத்தில் உள்ள 12 பாரா மெடிக்கல் கல்லூரிகள் கலந்து கொண்ட வாடிப்பட்டி ஈஷா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். அவர்களை முதல்வர் சாம்சேட் தலைமையில் பேராசிரியர் முத்துப்பாண்டி, பி.ஆர்.ஓ. சீதாராமன், மாணவர் பொறுப்பாளர் ராஜா ஆகியோர் வாழ்த்தினர்.

    • தென்னாப்பிரிக்காவுடனான போட்டியை இந்திய மகளிர் அணி டிரா செய்தது.
    • இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

    லாசானே:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் 5 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானே நகரில் நடைபெற்றது.

    இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மலேஷியாவை 7-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் போலந்தை இந்தியா வீழ்த்தியது.

    புள்ளிகள் அடிப்படையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணியும் போலந்து அணியும் மோதின. இதில் 6-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்றது.

    பெண்கள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்திய மகளிர் அணி இழந்தது.

    ×