search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandi Yag"

    • கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதிக்காக மஹா சண்டி யாகம் நடந்தது.
    • இந்த மஹா சண்டி யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந் தேதி மஹா சண்டி ஹோமம் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை யாகசாலையில் வைத்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் நேற்று காலை யாகம் வளர்க்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா சண்டி யாக பூஜை நடைபெற்றது.

    இந்த யாகத்தில் 16 பட்டுப்புடவைகள், தங்க தாலி, வெள்ளி கொலுசு மற்றும் 237 வகையான மூலிகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம், வில்வபழம், மாதுளை உள்பட பலவகை பழங்கள் மற்றும் தாமரைப்பூ, மல்லிகைப்பூ உள்பட அனைத்து வகையான பூக்கள், பாதாம், முந்திரி உள்பட அனைத்து வகையான தானியங்கள் போன்றவற்றை அக்னியில் போடப்பட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது.

    இந்த யாகத்தில் கலந்து கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பதால் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்று கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த மஹா சண்டி யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    ×