என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chandrima Bhattacharya"
- ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை.
- 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம்
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து, மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது:-
சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கலந்தாலோசிக்கப் பட்டது.
உணவு பொருட் களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, சைக்கிள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் பாதிக்கப்படும். அதை ஈடுகட்ட சிலபொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தோம். குறிப்பாக, அழகு சாதனப் பொருட்கள், குளிர்பானங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.
மக்களின் வரிச்சுமையை குறைக்க 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி, சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கூட்டம் அக்டோபர் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறுதி பரிந்துரைகள் உருவாக்கப்படும். அவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அடுத்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மேகாலயா, பஞ்சாப், குஜராத், பீகார் ,கோவா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 13 மந்திரிகள் பங்கு பெறுகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்