search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chariot accident"

    • மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அருகில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற மத்தூரம்மா என்ற கிராம தேவதை கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவில் அதிக உயரத்தில் மிக பிரம்மாண்டமான தேர் அமைக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம். மேலும் டிராக்டர் மற்றும் எருதுகளை கட்டி தேரை இழுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டும், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றும் மத்துரம்மாவை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில், மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான 127 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து இழுத்துச் சென்ற போது, ஹிலல்லிகே என்ற கிராமத்தில், எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
    • காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவு.

    தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின்போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அவர்களில் அப்பகுதியினைச் சேர்ந்த மனோகரன் (வயது 57) மற்றும் சரவணன் (வயது 50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு நபர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
    • திடீரென தேர் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாப்பாரப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் இன்று தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், தேர்த்திருவிழாவின் போது திடீரென தேர் கவிழ்ந்தது. அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×