என் மலர்
நீங்கள் தேடியது "Chariot festival"
- முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
- திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வா ய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
தேரோட்டம்
குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.
சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வருவார்கள். இந்த தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் விசேட அன்னதானம் வழங்கப்படுகிறது. 4-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹாமேரு தியான மண்டபத்தில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 6-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறும். 7-ந்தேதி குருஜெயந்தி, 8-ந்தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம், அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை அடியவர்களுக்கு விசேட அன்னதானம் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
- தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழாவின் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. மூங்கில் கம்புகளை வைத்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக சுவாமி அய்யப்பனின் தங்கவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் என்று அழைக்கப்படும் கருப்பசாமி ஆட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம்.
- பொதுவாக, இந்தப் பகுதிகளில் உள்ள அருவிகளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தந்த வண்ணம் உள்ள சூழலில், இந்த இயற்கை அழகு பொருந்திய குற்றாலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க திருக்குற்றாலநாத சுவாமி கோயில்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம்.
பொதுவாக, இந்தப் பகுதிகளில் உள்ள அருவிகளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தந்த வண்ணம் உள்ள சூழலில், இந்த இயற்கை அழகு பொருந்திய குற்றாலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க திருக்குற்றாலநாத சுவாமி கோயில்.
இந்தக் கோவில்களில் ஆண்டு தோறும் திருவாதிரைத் திருவிழா, விசு திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதும், நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள இந்த குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மார்கழி மாதம் கொண்டாடப்படும் திருவாதிரைத் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறும்.
அப்படிபட்ட இந்த திருவாதிரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 28-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவாதிரைத் திருவிழாவானது வருகிற 6-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், 5-வது திருநாளான இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவபூதகனம் வாத்தியங்கள் முழங்க, முதலில் விநாயகர் தேரும், 2 -வதாக முருகன் எழுந்தருளிய தேரும், 3-வதாக நடராசர் எழுந்தருளிய தேரும், 4-வதாக குற்றாலநாதர் எழுந்தருளிய தேரும், 5-வதாக குழல்வாய்மொழி அம்மன் தேரும் ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருநாள் அன்று காலை 9-மணிக்கு சித்திரை சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 6-ம் தேதி 10-ம் திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து, அதே தினத்தில் காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கோவிலின் தை தேரோட்ட திருவிழா கடந்த 15 -ந் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன .
விழாவின் 9-ம் நாளான நேற்று ஓம்சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர். புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜய்குமார், புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.தேரோட்டத்தை காண்பதற்க்கு சுற்று வட்டார கிராமபகுதி மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அவிநாசி:
சேவூர் அருகே மொண்டிபாளையத்தில் மேலத்திருப்பதி எனப் போற்றப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாத தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ந் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. 4 -ந் தேதி பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடும், 5 -ந் தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது. 6-ந் தேதி மகாதிருமஞ்சனம், மகாதரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனைகள் ஆகியவையுடன் விழா நிறைவடைகிறது.
- 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சேமலை கவுண்டம்பாளையத்தில் வலுப்பூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா கடந்த 26-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் மற்றும் அலகுமலைக்கு சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கட்டளைதாரர்களின் உபயத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதன் பின்னர் வலுப்பூர் அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் பகுதியில் துவங்கி வலுப்பூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து வலுப்பூர் அம்மனுக்கு, பால், சந்தனம், தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.
- 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.
- அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.
அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் பிரசித்திப்பெற்ற இந்த விழாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி, வாழப்பாடி, பேளூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தாண்டு தேர்த்திருவிழா ஒரு வார விழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலாவதாக கரியராமர் கோவிலிலும், அடுத்தடுத்து வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பிரசித்திப் பெற்ற வெங்கட்டராமர் கோவில் பல்லக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றது.
இந்தவிழாவில் வெங்கட்டராமர், அண்ணாமலையார், காளியம்மன் உற்சவ மூர்த்திகளை 2 பல்லக்குத் தேர்களில் ரதமேற்றி, பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊர்வலமாக சென்று வினோத முறையில் தேரோட்டம் நடத்தினர். மாவிளக்கு ஊர்வலம் நடத்திய பெண்கள் 'குலவை' குரலோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இத்திருவிழாவில் பங்கேற்ற, ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலை போட்டு சமபந்தி விருந்து வைத்து பழங்குடியின மக்கள் அன்பை பகிர்ந்து அசத்தினர்.
இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி, வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பெலாப்பாடி மலை உச்சியில் அமைந்துள்ள 3 மலைக்கோவில் திருவிழாவிற்கும் ஆண்டு தோறும் தவறாமல் சென்று வருகிறோம். மலை கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் சுவாமிகள் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதால் பயபக்தியோடு திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.
தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களையும் கோவில் மைதானத்தில் அமரவைத்து வாழை இலை போட்டு பொங்கல் சோறுயும், தானியக்குழம்பும் பரிமாறி, மலை கிராம மக்கள் விருந்தோம்பலையும் அன்பையும் வெளிப்படுத்தி ஆண்டுதோறும் அசத்தி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றனர்.
- முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
- பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் வழங்கபட்டது
ஆரணி:
ஆரணிஅடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 151-வது ஆண்டு தேரோட்ட பிரம் மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி காப்பு காட்டுதலுடன் தொடங்கியது,
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடந்தது. அதனை தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்கு மார் உள்பட திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த திருத்தேர் மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் ஆகியவை வழங்கபட்டது.
- அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் விழா நடந்தது.
- பக்தர்கள் பலர் அழகு குத்தி வந்திருந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் அழகு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம்- தேர் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.
இதை தொடர்ந்த இந்த ஆண்டுக்கான குண்டம்- தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28-ந் தேதி கொடிசேலை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி தினமும் சுவாமி சிங்கம் வாகனம் அன்ன பச்சி, காமதேனு, புலி, குதிரை, சட்டத்தேர், யானை, தொப்ப செட்டி ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை குண்டம் விழா நடந்தது. இதில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு குண்டம் தீ மிதித்தனர். மேலரும் பக்தர்கள் பலர் அழகு குத்தியும் வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி யும், இரவு சிங்காசனத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி காலை அக்கினி கரகம் எடுத்து வருதல், அதனைத் தொடர்ந்து கம்பம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
- கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கணபதி ஹோமம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதனைத்தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி குண்டம் விழாவும், அதனைத்தொடர்ந்து தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.
இதனையடுத்து சாமி ஒவ்வொரு வாகனத்திலும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோவிலில் வளாக ங்கள் தண்ணீரால் தூய்மை செய்யப்பட்டு பின்னர் கணபதி ஹோமம், புண்ணிய தானம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
- முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரமோற்சவ விழாவில் தேர்த்திருவிழா, தெப்ப த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரமோத்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 26ந்தேதி நடைபெற்றது. தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடை பெற்றது. தொடர்ந்து, நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதில், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரிய தலைவர் வக்கில் வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி, உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறவுள்ளது.
- தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
- இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில், தாசில்தார் கலைச்செல்வி அறிவுரையின்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழாவை நடத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் கோவில் திருவிழா, இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். இந்து சமய அறநிலைய துறையினர் தவிர தனிப்பட்ட நபர்கள் யாரும் நன்கொடைகள் வசூலிக்க கூடாது.
சாமி ஊர்வலத்தின் போது எந்த தரப்பினரும் தனது சமூகத்தை முன்னிலை படுத்தி ஆடைகள் மற்றும் தொப்பிகள் அணியக்கூடாது. வெட்டும் குதிரை ஊர்வலம் வரும் 23-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டும் நடைபெற வேண்டும். தேரோட்டம் வரும் 25-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற வேண்டும்.
கோவில் பெயருடன் வெள்ளை நிற பனியன் அணிந்த பொத்தனூரைச் சேர்ந்த 60 பேர் மட்டும் தேருக்கு சன்னக்கட்டை போட வேண்டும். திருவிழா நடைபெறும் போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வருவாய்த்துறையினர் போலீசார் மற்றும் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.