search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaturthi ceremony"

    திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் முக்கியமான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். பின்னர் அதனை ஊர்வலமாக கொண்டு சென்று ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் மட்டும் 1,000 சிலைகள் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு திண்டுக்கல், நொச்சிஓடைப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள நொச்சி ஓடைப்பட்டியில் உள்ள தனியார் சிலை தயாரிப்பு நிறுவனத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக் கப்பட்டு பல்வேறு இடங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது, சுமார் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த நிறுவன உரிமையாளர் கஜேந்திரனிடம் கேட்டபோது, ‘ஆர்டரின்பேரில் சிலைகள் தயாரித்து அனுப்பி வைக்கிறோம். உயரத்துக்கு ஏற்றாற்போல ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை விநாயகர் சிலை உள்ளது. மேலும், மண்பானைகள், அகல்விளக்கு, மண்ணால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில் ஆகியவற்றையும் விதவிதமாக தயாரிக்கிறோம். ரசாயனம் கலக்காமல் ஒரு மணி நேரத்தில் நீரில் கரையும் வகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்கிறோம்’ என்றார். 
    ×