search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheaking"

    • ஜெயங்கொண்டத்தில் ஆவணம் இல்லாமல் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • அபராதம் விதித்து எச்சரிக்கை செய்த போக்குவரத்து போலீசார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட ம் ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்ட் ரோடு, நான்கு ரோடு, சிதம்பரம் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, கும்பகோணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வந்தவர்கள், வண்டி நம்பர் எழுதாமல் வந்தவர்கள், வண்டி நம்பர் பிளேட்டில் வண்டி நம்பர் சரிவர தெரியாமல் வந்தவர்கள், குடிபோதையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூபாய் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதில் சிக்கிய 18 வண்டிகளுக்கு போலீசார் 500 முதல் 1500 வரை அபராதம் விதித்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இரண்டு நபர்களுக்கு தலா பத்தாயிரம் வீதம் இரண்டு வண்டிகளுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலா னவர்கள் இளைஞர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்
    • இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சின்னமுத்து, ரவி, இளங்கோவன் ஆகியோர் பெரம்பலூர் வெங்கடேசபுரம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தரமற்றமுறையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ சமைக்கப்பட்ட உணவு, அரை கிலோ சிக்கன் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக பெரம்பலுரில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனைத்து பிரியாணி கடைகளிலும், அசைவ உணவகங்களிலும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் 5-அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
    • ரெயில்வே ஜங்ஷனிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது

    கே.கே. நகர்,

    நாடுமுழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.இதையடுத்து பாதுகாப்பு பணிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.திருச்சி விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள், ெவளியே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழக போலீசாரின் சோதனை நடைபெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகனங்கள் நிற்கும் இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த சோதனையானது நேற்று இரவு தொடங்கியது. நாளை மற்றும் நாளை மறுநாள் வரை (16 -ந் தேதி) வரை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.இந்த சோதனை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணி அளவில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றார்.இதே போன்று திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கும் பயணிகள் உடைமைகள் மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலம் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. இதில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

    • அரியலூரில் 106 கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது
    • சோதனையில் புகையிலை போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 106 கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.வி.கைகாட்டி பகுதி மற்றும் அரியலூர் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் புகையிலை போன்ற போதை வஸ்துகள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • திருச்சி விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை
    • வேறு பிரிவுக்கு அதிரடி மாற்றம்

    திருச்சி,

    திருச்சி விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிமாநிலத்தில் இருந்து திருச்சி விமான நிலையத் திற்கு மாற்றப்பட்டு பணி–யாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தின் முனைய பகு–திக்குள் அவர் வந்தார். அப் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வீரர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.அதனை விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி காண் பித்த பின்னரும் அவரை உள்ளே அனுமதிக்காமல், அவர் அளித்த அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் மீண்டும் சோதனை செய்துள்ளார். இருந்தபோதிலும் விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்து அவரிடம் விளக்கம் கேட்டனர்.இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வானது விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்ப–டுத்தியது. பணியில் இருந்த காவலருக்கு விமான நிலைய இயக்குனரை கூட தெரியா–மல் அவர் எவ்வாறு பணி–புரிந்தார் என மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினரிடம் கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது.மேலும் விமான நிலைய இயக்கு–னரை சோதனை செய்யும் நிலை இதுபோன்று பலமுறை நடைபெற்று இருப்பதும், இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மற்ற அலுவலர்களோ, அதிகாரிகளோ விமான நிலையத்திற்குள் நுழையும் போது அவர்களது அடை–யாள அட்டையை காண்பித் தால் உள்ளே அனுமதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஒரு விமான நிலைய இயக்குனர் முனை–யத்திற்குள் நுழையும்போது அவரின் அடையாள அட் டையை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்பு உள்ளே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்ப–டுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது
    • அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து உள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லக்குடி அருகே 2௦௦ லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது
    • தப்பி ஓடியவரை தேடி வரும் போலீசார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி தபை பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் சோதனையிட்டபோது தபை ஏரிக்கரையில் சாராய ஊறல் வைத்து இருந்தது கண்டறியப்பட்டது.4 லிட்டர் வடிகட்டிய சாராயமும், 200 லிட்டர் சாராய ஊறலும் அங்கு இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை செய்த போது மேற்கண்ட சாராய ஊறலை லால்குடி கள்ளக்குடி ராஜா டாக்கீஸ் எதிர்ப்புறம் உள்ள சிதம்பரம் சாலையில் வசிக்கும் தனபால் என்பவர் போட்டு வைத்திருந்ததாக தெரிய வந்தது. அவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 18 பேர் இறந்தனர். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லக்குடியில் சாராய ஊறல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி அரவை ஆலைகளில் போலீசார் சோதனை
    • ரேஷன் அரிசியை மாவாக அரைத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை எஸ்பி சுஜாதா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசி அரவை ஆலை மற்றும் மாவு மில்களில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகள் மற்றும் மாவு மில்களில், கால்நடைக்கு உணவாகவோ, பிற வர்த்தக நோக்கங்களுக்காக ரேசன் அரிசியை மாவாக அரைத்தோ அல்லது குருணையாக உடைத்தோ கொடுக்கப்படுவது தண்டனைக்குறிய குற்றமாகும். இது தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வ நடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் எங்களுக்கு தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • தீவிர வாகன சோதனை நடைபெற்றது
    • அபராதம் விதித்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போக்குவரத்து போலீசார் சிதம்பரம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், இலகு ரக வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், வாகனங்களின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.


    ×