என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chennai salem 8 way green road"
சேலம்:
சேலத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை இடையே 8 வழி சாலை தேவை இல்லாத ஒன்று. சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஆனால் 4-வது தேசிய நெடுஞ்சாலை தேவையில்லை. 2 ரெயில் பாதை, விமான போக்குவரத்து உள்ளது. அதனால் 8 வழி சாலை திட்டம் தேவையில்லாத ஒன்று. 8 வழி சாலையை எதிர்த்து நான் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன். எனது வக்கீல் ராஜா என்பவர் வாதாடினார். நானும் அங்கு சென்றேன். அப்போது அன்புமணி எம்.பி அவர்கள் இந்த 8 வழி சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த மன வேதைனையும், மன அழுத்தத்தில் இருப்பதாக கூறினர்.
இதை கேட்ட நீதிபதிகள் சம்பந்தபட்ட அரசின் அட்வகேட் ஜெனரலிடம் கேட்டனர். நாங்கள் பொதுமக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கூறினர். இதைகேட்ட நீதிபதிகள் இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
ஆனால் எங்கள் நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான். இதை சட்ட ரீதியாக தான் நாங்கள் அனுகியுள்ளோம் தேவைப்பட்டால் அரசியல் ரீதியாக குதிப்போம். எனவே 8 வழி சாலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளில் ஒவ்வொறு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை அமைத்து 50 டி.எம்.சி நீரை தேக்கலாம். வருங்காலத்தில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும். ஆனால் சேலம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆனால் கடந்த 6 வாரமாக மேட்டூர் 155 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. மேட்டூர் உபரி திட்டம் தொடங்க கோரி 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெற 50 டி.எம்.சி தண்ணீர் உபரி நீரே போதுமானது. மேச்சேரி, ஆத்தூர் தலைவாசல், வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, ஆகிய பகுதிகளை இணைத்து மேட்டூர்-சேலம் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்திற்கு நிறைவேற்றதற்காக ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்படும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றவில்லை. சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் நிறைவேற்ற முடியும்.
கே- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து உங்கள் கருத்து
பதில்- கருணாநிதி தி.மு.க-வுக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழகத்திற்கும் தலைவர் அவர். இந்தியாவிற்கே வழி காட்டியாக இருந்தவர். அவரின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதை அரசியலாக பார்க்க கூடாது.
கே- முதல் அமைச்சர் மீது ஊழல் புகார் தி.மு.க கொடுத்துள்ளது.
பதில்- பொதுப்பணித் துறையில் 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார். அப்போது 5 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அது மட்டும் அல்ல தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதை ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.
69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. இதனால் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால். தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும். இதனால் ஒட்டு மொத்த தமிழக மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார். #anbumani #tngovt #chennaisalem8waygreenroad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்