search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheyyar student death"

    செய்யாறு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவன் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #schoolstudentdeath

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாளிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. விவசாயி. இவரது மனைவி சூரியகலா. இவர்களுக்கு மணிகண்டன், மதன்குமார் (17) என்ற 2 மகன்களும், மணிமேகலை என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்களில் மதன்குமார், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த வாரம் ரூ.8 ஆயிரத்தில் ஒர ஆண்ட்ராய்டு போனை, பெற்றோர் மதன்குமாருக்கு வாங்கி கொடுத்தனர்.

    அந்த போனை பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை மதன்குமார் சீருடையில் பள்ளிக்கு போன் எடுத்து சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த பெற்றோர், மதன்குமாரின் நண்பர்களிடம் கேட்டனர். மதன்குமார் எங்கு சென்றான்? என தெரியவில்லை என நண்பர்கள் கூறினர். இரவு முழுவதும் பெற்றோர் மகனுக்காக காத்திருந்தனர். ஆனால், மதன்குமாரை பற்றி எந்த தகவலும் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

    இன்று காலை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு புங்கம் மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் மதன்குமாரின் பிணம் தொங்குவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுக் கொண்டு பள்ளிக்கு ஓடினர். தகவலறிந்ததும், செய்யாறு போலீசாரும் பள்ளிக்கு வந்தனர்.

    மரத்தில் தொங்கிய மதன்குமாரின் பிணத்தை போலீசார் மீட்டு பார்வை யிட்டனர். சட்டை பாக்கெட்டில் ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.ஆண்ட்ராய்டு போன் மாயமாகியிருந்தது.

    பெற்றோருக்கு தெரியாமல் புதிய போனை ரூ.6 ஆயிரத்திற்கு விற்று இருக்கலாம். செல்போன் எங்கே? என்று பெற்றோர் கேட்பார்கள் என பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

    செல்போனை விற்கும் அளவுக்கு மாணவன் மதன் குமாருக்கு சுமை ஏதுமில்லை. வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது நன்றாக தான் வந்தார் என்று பெற்றோர் தெரிவித்தனர். இதனால், மாணவனின் சாவில் மர்மம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, மாணவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து, மாணவனிடம் ரூ.6 ஆயிரம் பணம் எப்படி வந்தது. அவருடைய செல்போன் யாரிடம் இருக்கிறது? என்பது குறித்தும், மாணவன் மதன் குமாரை யாராவது கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #schoolstudentdeath

    ×