search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children sold"

    • சுரண்டை பகுதியை சேர்ந்த 1 வயது குழந்தை, சேர்ந்தமரத்தை சேர்ந்த 8 மாத குழந்தை ஆகியவற்றை தலா ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
    • குழந்தைகளுக்கு போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம், வி.கே.புதூரில் அரசு முத்திரையுடன் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுப்பதாக போலீ சாருக்கு புகார் சென்றது.

    2 பேர் கைது

    விசாரணையில் வி.கே.புதூர் ராஜகோபாலபேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிரேசன் (வயது 32), சுரண்டை அருகே உள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜானகி ( 49) ஆகியோர் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுப்பதும், ஒரு சான்றிதழுக்கு ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ளதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கதிரேசன் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு, சிந்துபூந்துறை சேர்ந்த ராஜேஸ் மனைவி கவிதா உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.

    மேலும் 4 பேர் சிக்கினர்

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கவிதா மற்றும் சாம்பவர் வடகரையை சேர்ந்த பிள்ளைபெருமாள் மனைவி பொன்னுத்தாய் ( 75), அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற ராமசாமி ( 45), குலையநேரியை சேர்ந்த சரவணன் என்ற முருகன் ( 37) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ரூ.3 லட்சத்திற்கு விற்பனை

    பச்சிளம் குழந்தைகள் உள்ள பெற்றோர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி குழந்தைகள் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த குழந்தைகளுக்கு போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் சுரண்டை பகுதியை சேர்ந்த 1 வயது குழந்தை, சேர்ந்தமரத்தை சேர்ந்த 8 மாத குழந்தை ஆகியவற்றை தலா ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அந்த குழந்தைகளை மீட்டு நெல்லையில் உள்ள சரணாலத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த கும்பல் வேறு எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்தபாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த மாவட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உள்ளனர். 

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது. 
    ×