search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children women missing"

    மதுரை அருகே குழந்தைகளுடன் பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மனைவி மலை ஈஸ்வரி (வயது 38). இவர்களுக்கு மகாலட்சுமி என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று மலை ஈஸ்வரி தனது மகள் மகாலட்சுமியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார்.

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததால் தங்கப்பெருமாள், சிலைமான் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மலை ஈஸ்வரி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி ஆகியோரை தேடி வருகிறார்.

    இதேபோல் மதுரை மாவட்டம், கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி (29).

    சம்பவத்தன்று லட்சுமி தனது மகன்கள் முத்தரசு (11), பாலாஜி (10) ஆகிய 2 பேருடன் அருகே உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் லட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் திருமங்கலம் தாலுகா போலீசில் கணேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

    ×