search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chithirai Chariot"

    • தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி பெரிய தேரிலும், கோமதி அம்மன் சிறிய தேரிலும் நேற்று எழுந்தருளினர்.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி காலை சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவது வழக்கம். சித்திரை திருவிழா 9-ம் நாளான நேற்று சுவாமி அம்பாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி பெரிய தேரிலும், கோமதி அம்மன் சிறிய தேரிலும் நேற்று காலை 5.30 மணிக்கு எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து 6.45 மணிக்கு விநாயகர் முருகன் தேரோட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 10.20 மணிக்கு சுவாமி தேரோட்டம் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து அம்பாள் தேரோட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ. சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டது. இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், கோவில் துணைஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சங்கரன்கோவில் மாரிச்சாமி, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன முத்துக்குமார், சுப்புத்தாய், மாணவரணி அரசு வக்கீல்கள் கண்ணன், ஜெயக்குமார், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேசன், அஜய் மகேஷ் குமார், வெங்கடேஷ், வீரா, வீரமணி, ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

    ×