என் மலர்
நீங்கள் தேடியது "Christmas"
- இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
- கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேராலயம் சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
வேளாங்கண்ணி சுற்றுலா வந்த பயணிகள் மின்விளக்கு அலங்காரத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
- வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் பகுதியில் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்தவ பெருவிழா இன்று மாலை நடக்கிறது.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்க செல்லும் திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதில் வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வி.ஜி.சந்தோசம் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
- கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.
சென்னை:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமசை வருகிற 25-ந்தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப்பண்டிகையின் நோக்கமாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது.
டிசம்பர் முதல் வாரத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் வைக்க தொடங்கினார்கள். கிறிஸ்துவ ஆலயங்களிலும் நட்சத்திரங்கள், குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.
பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது. ஆலயங்களை அழுகுபடுத்த விதவிதமான அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள கடைகள், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திரங்கள், வண்ண மின் விளக்குள், குடில்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள், திருச்சபைகளில் இப்போதே அலங்காரப் பணிகள் தொடங்கி விட்டன. ஆலயங்கள் முழுவதும் நட்சத்திரங்கள், மின் விளக்குகள் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் மாட்டுத் தொழுவம் அடங்கிய குடில்கள் சாந்தோம், பெசன்ட் நகர், எழும்பூர், மாயவரம், பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபைகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் பார்த்து வணங்கி செல்கின்றனர்.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் கேக் விற்பனையும் அதிகரித்து உள்ளது. பிரபல கேக் நிறுவனங்களில் பிளம் கேக் உள்ளிட்ட விதவிதமான கேக்குகளை ஆர்டர் செய்துள்ளனர்.
ஆலயங்களில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கேக் வழங்குவதற்காக மொத்தமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கேக் கடைகளில் கூட்டம் நிரம்பி உள்ளது.
புத்தாடைகள் வாங்குவதற்கு ஜவுளி கடைகளுக்கும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் நட்சத்திர ஓட்டல்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆதரவற்ற மையங்களில் உள்ள முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு கிறிஸ்துமஸ் அமைப்புகள் புத்தாடைகள், கேக் வழங்கி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் அடைந்துள்ளது.
- சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்ல வழக்கமாக ரூ.4,400 கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு.
- தற்போது பயணிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விமான கட்டணங்களும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை கொண்டாட்டமாகவும் மாறி உள்ளது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏராளமானோர் விமானங்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்திய சுற்றுலா தலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் கோவாவில் தான் அதிக அளவில் பயணிகள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டும் கோவாவுக்கு செல்வதற்கு விமானங்களில் முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கான விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது. அது போல கோவாவில் இருந்து ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் 4 மடங்கு உயந்துள்ளது.
சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்ல வழக்கமாக ரூ.4,400 கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது பயணிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
டிசம்பர் 23, 24-ந்தேதிகளில் அனைத்து விமான இருக்கைகளும் நிரம்பி விட்டன. அதுபோல ஜனவரி 1, 2-ந்தேதிகளிலும் விமானங்களில் டிக்கெட் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
கோவாவில் இருந்து சென்னை தவிர டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களுக்கும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
- பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
திண்டுக்கல்:
உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் பல்வேறு நாடுகளில் ஒரு மாதமாகவே கிறிஸ்துமஸ் விழா களைகட்டி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வழிபாட்டுக்குகூட தடைவிதிக்கப்பபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வாங்கிச்செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண விளக்குகளால் அலங்கரித்து குடில் அமைத்தும், நட்சத்திரங்களை தொங்கவிட்டும் அலங்காரம் செய்துள்ளனர்.
குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாண்டாகிளாஸ் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதேபோல் வீடுகள் மற்றும் பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் இரவு நேர வழிபாட்டிற்கும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அனைத்து தேவாலயங்களிலும் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
- வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது.
- மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.
சிட்னி:
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
வீடு வீடாக சென்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்குகிறார்கள். பொதுவாக கிறிஸ்துமஸ் தாத்தா உடல் பருமனுடன் இருப்பார்.
இந்த நிலையில் உடல் பருமனான கிறிஸ்துமஸ் தாத்தாக்களை வணிக வளாகங்களில் தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுகாதார நிபுணர் வின்சென்ட் கான்ட்ரா வினாட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிக எடை கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைத்து அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிப்பதால் அனைத்து உடல் பருமனான சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) தடை செய்ய வேண்டும். சாண்டா உடல் பருமனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.
ஏனென்றால் அது தவறான செய்தியை அளித்துவிடும். நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும். அதை பண்டிகைகளுடன் தொடர்புப்படுத்தி கொண்டாட வேண்டும் என்பதற்கு எதிராக போராட விரும்புகிறேன். அதிக எடையுடன் இருப்பதை மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்தக்கூடாது.
புதிய நெறிமுறைகளை வகுத்து சாண்டா கிளாஸ் பருமன் இல்லாமல் இருக்க நான் விரும்புகிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா உடையின் முன்பகுதியில் தலையணைகள் அல்லது வேறு பொருட்களை திணிக்கும் பழக்கம் முடிவுக்கு வரவேண்டும்.
வணிக வளாகங்களில் சாண்டாவை கொழுப்பாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளக்கூடாது. இது மகிழ்ச்சியான உறவு முறை மற்றும் உணவு, பானங்களின் அடிப்படையில் குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் வின்செண்டின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பீட்டர் ஹக் கூறும்போது, 'ஒல்லியான சாண்டா என்ற யோசனை ஆபத்தானது. நாள் முழுவதும் நிறைய குழந்தைகளை சந்திக்க சாண்டாஸ் வலுவாக இருக்க வேண்டும்' என்றார்.
- கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
- முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
சபைகுரு அருள்தனராஜ் தலைமை தாங்கினார். பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களை இசையுடன் பாடினர். மதுரை -ராமநாதபுர முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார். இதில் உதவி குருக்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.
- கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக.
- இந்த கிறிஸ்துமஸ் நாளிலும் இறைவன் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.
வெளிநாடு ஒன்றில் பெண்மணி ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். அது குளிர்காலம். அந்தப் பெண்மணி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்தின் வரவேற்பு அறையிலிருந்து அந்தப் பெண்மணிக்கு அழைப்பு வந்தது. "உங்களைப் பார்ப்பதற்காக இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்" என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம்! ஏனெனில், தன்னை கவனிப்பதற்கு, தன் மீது கரிசனை காட்டுவதற்கு யாருமே இல்லை என்ற ஏக்கம் அந்தப் பெண்மணியின் மனதில் இருந்து வந்தது. "யாராவது என்னிடம் அன்பு காட்டமாட்டார்களா?" என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மனதில், தன்னை தேடி வந்திருப்பது யாராக இருக்கும்? என்ற கேள்வியுடன் வரவேற்பறைக்கு விரைந்து சென்றார்.
அங்கே, ஓர் ஆணும் பெண்ணும் அவருக்காக காத்திருந்தனர். அந்த ஆண் கையில் கிட்டார் இசைக்கருவி இருந்தது.
அவர்கள் இருவரும், "அம்மா, உங்கள் கணவர் நம் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்பதும், அவர் தற்போது ராணுவப் பணியில் தூர தேசம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். மனைவியாகிய உங்களை அவர் நினைவுகூர்ந்து, உங்களுக்காக ஒரு பாடல் பாடும்படி எங்களை அனுப்பியிருக்கிறார்" என்று கூறினார்கள்.
அதன்படியே அவர்கள் பாடத் தொடங்கினார்கள். அந்தப் பாடல், அந்தப் பெண்மணியின் கணவர் ராணுவப் பணிக்காக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் பாடிக்கொண்டிருந்த பாடல் ஆகும். அந்தப் பாடலைக் கேட்டதும் பெண்மணி உணர்ச்சிவசப்பட்டார். கணவரின் நேசத்தை நினைத்து அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது.
அந்தப் பெண்மணி பாடலை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த வேளையில், அலுவலக கதவைத் திறந்து உள்ளே ஒரு நபர் நுழைந்தார். அவர் வேறு யாருமல்ல! ராணுவப் பணிக்காக தூர தேசத்திற்குச் சென்றிருந்த அந்தப் பெண்மணியின் கணவர்தான்.
ராணுவச் சீருடையுடன் நேராக தன் மனைவியை காண்பதற்கு மனைவி பணியாற்றும் அலுவலகத்திற்கே அவர் வந்திருந்தார். நெடுங்காலம் கழித்து கணவரை கண்ட மகிழ்ச்சியில் அந்தப் பெண்மணி ஓடோடிச் சென்று அவரை கட்டியணைத்துக் கொண்டார். அவரும் மனைவியை அன்போடு தழுவிக்கொண்டார்.
கிறிஸ்துமஸ் நாளின்போதும் இதுபோன்ற நிகழ்வே நடந்தது. கிறிஸ்து பிறக்கும் வரைக்கும் இறைவனுடைய செய்தியை மக்கள், தீர்க்கதரிசிகள் என்னும் இறைத்தூதுவர்கள் வழியாக கேட்டுக்கொண்டிருந்தனர். இறைவனை குறித்து சங்கீதங்களை பாடிக்கொண்டிருந்தனர்.
இறைவனை எதிர்பார்த்து காத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படியாக, இறைவனே இந்த உலகத்திற்கு மனுக்குலத்தை தேடி அவர்கள் வாழ்வை சீரமைக்க வந்த நாள்தான் கிறிஸ்துமஸ்.
மீட்பை வழங்குபவர்
இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் பாவத்தின் வேர் இருக்கிறது. இதினிமித்தம் சாபம் ஒவ்வொரு மனிதனையும், மனுஷியையும் பின்பற்றி வருகிறது. அவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்துகொள்கிறது.
இந்த இருளிலிருந்து என்னை விடுவிப்பவர் யார், என்று கலங்கும் மனுக்குலத்திற்கு ஓர் மீட்பை வழங்கக்கூடியவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே.
ஏனென்றால், இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் மற்ற ஒருவருக்கு மீட்பை வழங்க முடியாது. இவ்வுலகில் பிறந்திருக்கும் எல்லா மனிதர்களும் பாவிகளே என்று வேதம் கூறுகிறது.
இந்நிலையில் மனுக்குலத்தை பாவத்திலிருந்தும், அதனால் உண்டாகும் சாபத்திலிருந்தும் விடுதலை செய்ய, எல்லாம் வல்ல இறைவன் தம்முடைய தூய வித்தை ஒரு கன்னியின் கர்ப்பத்திலே விதைத்து, பாவமற்ற தூய இறை உருவம் கொண்ட பாலகனாக 'இயேசு' என்ற பெயரிலே, கிறிஸ்துமஸ் தினத்தன்று, 2022 வருடங்களுக்கு முன்பதாக பெத்லகேம் என்னும் சிற்றூரில் உதித்தார்.
புது வாழ்வு தருபவர்
அவர் ராஜ அரண்மனையில் பிறக்கவில்லை. அவருடைய தாய் தங்குவதற்குகூட இடம் இல்லாதபடியினால் ஒரு மாட்டுத் தொழுவத்தில், ஒதுங்கிய நிலையில், அந்த ஏழ்மையான நிலையில் அவரை பெற்றெடுத்தார்கள். கந்தை துணிகளினால் அவரை சுற்றியிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது.
ஏனென்றால், அவர் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கமே, தள்ளப்பட்ட நிலையில், நம்பிக்கை இல்லாமல், பெலன் இல்லாமல், இவ்வுலக இல்லாமையிலும், ஆன்மிக குறைவுகளினாலும் தவிப்போருக்கு, இறைவனுடைய துணையோடு புதுவாழ்வை அமைத்துக்கொடுக்க வழி செய்யவே வந்தார்.
ஆகவேதான் இயேசு, "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்" என்று சொன்னார்.
நட்சத்திரம்
இயேசு இந்த உலகத்தில் உதித்தபொழுது, யூதருக்கு ராஜாவாக பிறக்கும் அவருடைய நட்சத்திரம் வானத்தில் உதித்தது. அதை கிழக்கு திசையில் மூன்று ஞானியர் கண்டார்கள். அந்த நட்சத்திரத்தை அவர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள்.
அந்த நட்சத்திரம், இயேசு இருந்த இடத்திற்கு அவர்களை வழிநடத்திச் சென்றது. அங்கு அவரைக்கண்டு தொழுது கொண்டார்கள். பொன்னையும், தூப வர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாக படைத்தார்கள்.
மெய்யாகவே அவர் ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, ஞானிகளுக்கும் ஞானத்தைப் போதித்து, அவர்கள் மூலம் உலக மக்களுடைய பிரச்சினைகளுக்கு மருத்துவ ரீதியிலும், ஆட்சி ரீதியிலும், உணவு உற்பத்தி செய்யும் ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும், இன்னும் மற்ற விஞ்ஞான ரீதியிலும், சமூக சேவை என்ற ரீதியிலும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் இறை ஞானத்தை ஞானிகளுக்கு கொடுக்க வந்தார்.
நம் பொருளாலும், ஞானத்தினாலும் இவ்வுலகில் இருக்கும் எல்லோரையும் சுமக்க, இந்த கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக. அதுதான் மெய்யான கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ் நாளிலும் இறைவன் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
முனைவர் பால் தினகரன்.
- கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
- சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.
ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.
ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சென்னை:
சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அனைவரையும் ஒருதாய் மக்களாகக் கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல். சமத்துவ விழாவாக நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வதை எனது கடமையாக கருதுகிறேன்.
மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடைபாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் தி.மு.க. அரசின் அடையாளம், சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு.
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட்டால், தமிழ்நாடு அரசு முடிந்தளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை-நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோ வில் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) டிசம்பர் 23 (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானா மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 2-ம் வகுப்பு பொது பெட்டிகள், மா ற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரெயில் (06041) தாம்ப ரத்தில் இருந்து டிசம்பர் 23 (வெள்ளிக்கிமை) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சேரும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய 2 அடுக்கு படுக்கை வசதிபெட்டி, 11 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா்.
- மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
சுரண்டை:
சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா். நிகழ்ச்சியில் மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இயேசு பிறப்பின் செய்தியை மாணவி அழகு காா்த்திகா வழங்கினாா்.
மாணவன் தனுஷ் வரவேற்புரை வழங்கினாா். தலைமை ஆசிாியா் மாாிக்கனி நன்றி கூறினார். மாணவன் விக்னேஷ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா். ஆசிாியை மொ்லின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாா். ஆசிாியைகள் சகாய நிஷா, தங்கசுபா செல்வரத்தினம், ஆசிாியா் சாம் அலெக்சாண்டா் ஆகியோா் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.