search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civil aviation"

    • கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார்.
    • இது எங்களின் பல வருட கடின உழைப்பின் பலன்.

    ஏர் கேரளா விமான நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை ஏர் கேரளா தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான நிறுவனமாக ஏர் கேரளா உருவெடுத்துள்ளது.

    கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் நாடுகளில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அகமது மற்றும் அயூப் கல்லடா இருவரும் இந்த திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டினர்.

    கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார். ஏர் கேரளா, இந்தியாவின் தென்கோடி மாநிலத்தின் முதல் பிராந்திய விமான சேவையாகும்.

    ஏர் கேரளா செயல்பாடுகளை தொடங்க இப்போது விமானங்களை வாங்க வேண்டும் மற்றும் ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (ஏஓசி) பெறுவதற்கான ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    அயூப் கல்லடா கூறுகையில், இது ஒரு முக்கியமான கட்டமாகும், இது விமான போக்குவரத்து அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தரங்களையும் நாங்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்கிறோம்.

    அஃபி அகமது கூறுகையில், எதிர்கொண்ட சவால்கள், முன்னேற்றம் குறித்து கூறினார். இது எங்களின் பல வருட கடின உழைப்பின் பலன். இதை நிஜமாக்க நானும் எனது கூட்டாளிகளும் அயராது உழைத்து வருகிறோம்.

    பலர் எங்களிடம் இது ஒருபோதும் நடக்காது என்று நிராகரித்தார்கள். நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் NOC எங்களுக்கு ஒரு பெரிய படியாகும் என்று கூறினார்.

    • உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
    • உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருந்தது.

    உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 2-வது இடத்திலும், தென் கொரியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 49-வது இடத்தில் சீனா உள்ளது.

    இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி கூறுகையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றோம். தற்போது பெற்றிருக்கும் இந்த புதிய நிலையை தக்கவைத்துக்கொள்வதில் சவால் உள்ளது. விமான போக்குவரத்து இயக்குனரகம் திறமையான அதிகாரிகளைக் கொண்டுள்ளது. எங்களுக்கு சரியான ஆதரவை வழங்கினால், நாங்கள் மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். தரவரிசை பட்டியலில் 102-வது இடத்தில் இருந்து 48-வது இடத்திற்கு முன்னேறியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என தெரிவித்தார்.

    ×