search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilian struggle"

    கூடலூரில் சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி வாழையை நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    கூடலூர்:

    கூடலூர் அதிகாரிவயல் பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. மேலும் குடிநீருடன், கழிவு நீரும் கலந்து பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. எனவே பழுதடைந்த குழாய்களை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளம்புழா பாலத்தின் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கொசு தொல்லைகளும் அதிகரித்து வருகிறது. கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் வாழையை நட்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாருவது இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. மேலும் பழுதடைந்த குழாய்களில் இருந்து குடிநீர் தினமும் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி வாழையை நட்டு போராட்டம் நடத்தினோம். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×