search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "claim"

    • ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    ஆனால் இது போதாது. ரூ.500-க்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பட்டாசு தொழிலாளர்கள் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பம் போதிய வருமானம் இன்றி தவிக்கும். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

    சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியதைபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைப்பற்றிய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள பாதரக்குடி ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். தற்போது மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது. இந்த சாலையானது ஊரின் மையப்பகுதியில் செல்கிறது. இதனால் வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. புஞ்சை, நஞ்சை நிலங்கள் கையகப்படுத்தும் நேரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர்-ஆணைய அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து கைப்பற்றப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பு தருவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் விலை போகும் சென்ட் இடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இதை கண்டித்து பாதரக்குடி ஊராட்சியில் இந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாலைப் பணிக்காக நிலங்களை இழந்தவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும், தங்களது நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.

    மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.

    இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். குறிப்பாக அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் பல ஆயிரம் ஏக்கர் இருந்த போதிலும் குறிப்பிட்ட நஞ்சை நிலங்களில் மட்டும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    விளைச்சல் இல்லாமல் பயிர்கள் கருகிப்போவது அல்லது புயல், வெள்ள காலங்களில் மழையால் பயிர்கள் அழுகியும், தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது.

    அபிராமத்தை சுற்றிலும் பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லை. இந்த பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால் பல ஆண்டுகளாக விவ சாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அபிராமம் பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டும் நம்பி 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

    விவசாய தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருகிறார்கள். குறைந்தது மாதத்திற்க்கு 25 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும்.

    ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்போது விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

    இதுபற்றி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டு களாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்கதையாகி விட்டது. ஆண்டுதோறும் ஒரே மாதிரியான மகசூல் விவசாயத்தில் கிடைப்பதில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் வேலையின்றி கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. விவசாய தொழி லாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு மழை, வெள்ளம். வறட்சி காலங்களில் இழப்பீட்டுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இனிவரும் காலங்களில் நிவாரணம் வழங்க தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    மதுரை

    அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதனை உலகத் தமிழினமே கொ ண்டாடி மகிழ்கிறது,

    7தமிழர்களின் விடுதலைக்காக மனித நேய ஆர்வலர்கள், அனைத்து தரப்பு மக்களும் போராடி இருக்கிறார்கள். அவர் களுக்காக அ.தி.ம.மு.க. சார்பில் என் நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 7தமிழர்களின் விடுதலையை சட்டப் போராட்டம் மூலம் நிறை வேற்றி இருக்கும் திமுக அரசை பாராட்டுகிறோம்.

    இந்நிலையில் 32 ஆண்டு களாக இளமையையும், வளமையையும் சிறையி லேயே கழித்து விட்டு வெளியில் வந்திருப்ப வர்களுக்கு இளமையை நம்மால் திரும்பித் தர முடியாது, வளமையை நம்மால் உருவாக்க முடியும், இவர்களின் எதிர்கால நலன் கருதி 7பேருக்கும் தலா 50 லட்ச ரூபாய் நிதி அளித்திட தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்,

    தமிழகத்திலேயே 7 பேரும் வாழ விரும்பினால் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி இந்திய குடிமகன்களாக வாழ சட்ட வழிவகை செய்திட மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • தென் மண்டல பட்டியலின பட்டியல் பழங்குடி எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமை யாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மாருதி நகா் சங்க அலு வலகத்தில் நடை பெற்றது.
    • எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

    நாமக்கல்:

    தென் மண்டல பட்டியலின பட்டியல் பழங்குடி எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமை யாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மாருதி நகா் சங்க அலு வலகத்தில் நடை பெற்றது. அதன் தலைவா் எஸ்.அகிலன் தலைமை வகித்தாா்.

    இதில், கடந்த 2018-2023 காலக்கட்டத்தில் தேவைக்கு அதிகமாக வாகனங்களை எண்ணைய் நிறுவ னங்கள் எடுத்ததால், 5 ஆண்டுகளில் மாதம் 1,000 கி.மீ. தூரம் கூட இயக்காத நிலையில் ஒரு டேங்கா் லாரிக்கு ரூ.36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது.

    இனிவரும் ஆண்டு களில் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது குறைந்தபட்சம் ஒரு டேங்கா் லாரியை 5,000 கி.மீ. தூரம் இயக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும்.

    காலாண்டு சாலை வரி, தேசிய அனுமதி வரி, வாகன தகுதி சான்றிதழ், காப்பீட்டுத் தொகை, வாகனத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒப்பந்தக் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும். சுங்க கட்டணமாக மாதம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியது உள்ளதால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, சுங்கக் கட்டணத்தை எண்ணை நிறுவனங்கள் தனியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், சட்ட ஆலோசகர் பேராசிரியர் மு.பெ.முத்துசாமி, செயலாளர் குணசேகரன், பொருளாளர் சத்திய மூத்தி, துணைத் தலை வர் காசிநாதன், துணைச்

    செயலாளர் சுப்பிர மணியன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி பகுதிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை/
    • மாணிக் தாகூர் எம்.பி குற்றச்சாட்டினார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணிக் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளிக்குடி தாலுகாவாக மாறி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவில்லை. தாலுகாவாக மாறுவதற்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களே இன்று வரை உள்ளது.

    இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒன்றை மோடி செய்திருக்கிறார். சுதந்திர தின விழா மேடையில் குடும்ப அரசியல் குறித்து பேசி இருக்கிறார். அது உண்மையிலேயே மற்றவர்களுக்காக சொன்னதா? அல்லது அமித்ஷாவின் மகன் குறித்து பேசினாரா? என்பது தெரியவில்லை.

    தமிழிசை சவுந்தராஜன், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது கூட அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றதில்லை. அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு தான் பா.ஜ.க. அரசியலில் அநாகரிகமான செயல்கள் நடைபெறுகிறது.

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பலமுறை பேசி உள்ளோம். ஆனால் அமைச்சரவை அலுவலகம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை புறக்கணிக்கிறது.

    அதே போல் திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி பகுதிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதற்கு சாட்சியாக கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது.

    திருமங்கலம், சிவகாசியில் சென்னை ெரயிலை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதையும் மத்திய அரசு நிராகரிக்கிறது. இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும் இ்வ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பைகிடங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த துயர சம்பவத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் பேசியதாவது:- தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பைகிடங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். சில வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இந்த துயர சம்பவத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கும் உரிய இழப்பீடு உடனே வழங்க வேண்டும். இதேப்போல் குப்பை கிடங்கில் வேலை நடந்த வருவதில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கோரிக்கை சம்பந்தமாக பேசும்போது அனைத்து தீர்மானமும் முன்மொழிந்து விட்டதாக கூறி கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் கோபால், சரவணன், கேசவன், காந்திமதி, தெட்சிணாமூர்த்தி, கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.
    • குழந்தையை யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரியாண்டிபாளைய–த்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த, மூன்று வயது ஆண் குழந்தையை, சென்ட்ரல் போலீசார் மீட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.குழந்தைக்கு உரிமை கோருவோர், உரிய ஆவணங்களுடன், நான்கு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும். விவரங்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 0421 2971198, ஈரோடு தத்து மையத்தை, 97906 13262, 99448 39573 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • அடிப்படை வசதி இல்லாத மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பிணத்தை எரிக்கக்கூடிய கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள பானாமூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் தண்ணீர்வசதி, காத்திருப்போர் இருப்பிடம், ரோடு வசதி, மின்விளக்கு வசதி போன்றவை இல்லை.

    பிணத்தை எரிக்கக்கூடிய கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பெரிய ஆபத்து ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். இது ரெட்டியபட்டி கிராமத்தில் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

    மயானத்துக்கு செல்லும் மண் ரோடு சேதமடைந்தது இருபக்கமும் கருவேல முட்கள் வளர்ந்து இருந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமையில் கருவேல மரத்தை அகற்றி மண் ரோட்டை சீர்படுத்தினர். தற்போது பெய்த மழையில் மயானத்திற்கு பிணத்தை எடுத்து செல்லக் கூடியவர்கள் தவறி விழக்கூடிய நிலையில் உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×