என் மலர்
நீங்கள் தேடியது "clash"
- ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
- "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மகாராஷ்டிரா அரசியலில் மொகலாய மன்னன் ஔரங்கசீப் கல்லறை பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மகன் சத்ரபதி சாம்பாஜி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சாவா" என்ற திரைப்படம் வெளியானது முதல் ஓரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்து அமைப்புகளான பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகியவை மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து ஔரங்கசீப் கல்லறை அமைந்துள்ள சாம்பாஜி நகர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்படி ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான "குர்ஆன்" எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
மேலும், இது தொடர்பாக வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதையடுத்து இஸ்லாமியர்களை கொதிப்படைய செய்தது. இதனால் அவர்கள் மகால், கோட்வாலி, கணேஷ்பேத் மற்றும் சித்னாவிஸ் பூங்கா என பல்வேறு பகுதிளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமுற்றனர். இந்த மோதல் நாக்பூரின் ஹன்சாபூரி பகுதியிலும் பரவியது.
அடையாளம் தெரியாத நபர்கள் கடைகளை அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், இந்த பகுதியிலும் கல்வீசி தாக்குதல் நடந்தது. நாக்பூர் முழுக்க மோதல்கள் அரங்கேறி வருகிறது.
வன்முறையை தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். வன்முறையை தொடர்ந்து காவல் துறையினர் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் காரணமாக வன்முறை நடந்த பகுதிகளில் அதிகாரிகள் சிசிடிவி வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க காவல் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
- கே. கே. நகரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது
- 2 பேருக்கு அருவாள் வெட்டு
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் நேற்று இரவு உடையான் பட்டி அருகே வார சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்த உடையான் பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேலு என்பவர், பழனிச்சாமியின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி மெதுவாக செல்லும்படி கூறியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி உள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடங்காத பழனிச்சாமி செம்பட்டு பகுதிக்கு சென்று விக்கி, கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், ராஜா, அண்ணாமலை, ராஜ்குமார், நாகராஜ் உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு மீண்டும் உடையான் பட்டி வார சந்தைக்கு வந்து அங்கு இருப்பவர்களிடம் தகராறு செய்து ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தி.மு.க.- விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
- அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வைத்தியநாதபுரம், கங்காணி சந்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.எஸ்.காலனி பழைய போலீஸ் நிலையம் அருகில், கட்சிக்கொடியேற்ற முயன்றனர்.
இதற்கு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கினர். இது தொடர்பாக சதீஷ்குமார், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ரமேஷ் (48), மணிகண்டன், கார்த்திக், அவரது சகோதரர் மற்றும் சிலரை தேடி வருகிறார்.
இதே வழக்கில் ராஜீவ்காந்தி நகர், ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகில் கணபதிபாளையம் கூட்டுறவு சொசைட்டி அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இந்த நிலையில்,அங்குள்ள இடத்தை சுத்தம் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரையடுத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- நம்பிராஜன் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மகன் முகில்(வயது 20). இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
சமாதானம்
கடம்போடுவாழ்வு ரோட்டில் சென்ற போது, மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜா உள்பட சிலர் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து முகிலின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் தங்களுக்குள் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத கடம்போடுவாழ்வை சேர்ந்த ராஜா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவில் முகில் தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து முத்து(75) என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள மோட்டார் அறைக்கு தீ வைத்தனர்.
வழக்குப்பதிவு
தொடர்ந்து அந்த கும்பல், ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடம்போடு வாழ்வை சேர்ந்த சின்னத்துரை மகன்கள் ராஜா, முத்து மற்றும் மாரியப்பன் மகன்கள் வெள்ளையன், கொம்பையா உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
- தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்து உள்ளனர்.
இது தொடர்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
இந்த தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு , சங்கம் ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
- இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு (வயது 29), சங்கம்(34) ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சிவசக்தி என்பவர் அங்கு வந்துள்ளார். அவரை 2 பேரும் தாக்கி உள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாலுவை கைது செய்தனர். இதற்கிடையே தகராறின் போது தனது 12 பவுன் தங்கநகையை காணவில்லை என்று பாலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
- அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை ராயன் (வயது 27). இவரது நண்பர் வேல்முருகன் (30). இவர் வானூர் பகுதியை சேர்ந்தவர்.இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வானூர் அருகே தென்கோடிபாக்கம் மெயின்ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 ேபரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் இறந்தார். வேல்முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது
- இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.
- வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்,. இதனால், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள்.
கடலூர்:
புவனகிரி அருகே சாமி ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. மாசிமகத்தை யொட்டி புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் சாமியை தீர்த்தவாரிக்கு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். தீர்த்தவாரி முடிந்ததும் சாமியை மீண்டும் ஊர்வலமாக எடுத்து வந்தனர் புவனகிரி அருகே உள மேலமானகுடி பகுதியில் சாமியை கொண்டு வந்த போது அப் பகுதியை சேர்ந்த வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார். இதனால் சாமியை ஊர்வமாக கொண்டு வந்தவர்கள் ஆக்திரம் அடைந்தனர். இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த தகராறில் எதிர் தரப்பை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன்குளம் புதியபூக்கள் கபடி குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.
இதில் கலைஞானபுரம் அணியும், சிலுவைபுரம் அணியும் மோதினர். இதில் சிலுவைபுரம் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோல்வி அடைந்த அணியை மற்றொரு அணியினர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கலைஞானபுரம் தொண்டியம்மாள் என்பவர் வீட்டின் வழியாக சென்ற போது அதிகமான ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனை தொண்டியம்மாள் என்பவர் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.
தகவல் அறிந்ததும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி, மாறி தாக்கி கொண்டனர். அப்போது இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இதில் பொன்னுச்சாமி, பள்ளி மாணவி பிரியதர்ஷினி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவு துலுக்கன்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவர்களுடன் குளத்தூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இன்று காலை நீடித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர்.
- சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் லோகிதக்கன், காவலர் வெள்ளதுரை ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மடக்கி உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வந்தனர்.
இந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் வாகன ஆவணத்தை கேட்டனர். அப்போது இருவரும் இது எங்கள் சித்தப்பா வாகனம் என்றும், ஆவணங்கள் வீட்டில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர். அதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எங்களை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். உடனே வாருங்கள் என்று கூறினார்.
அப்போது சம்பவ இடத்துக்கு பெண் ஒருவர் வந்தார். அவரது கணவரும் உறவினருமே போலீசில் பிடிபட்டிருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் விடுவிக்குமாறு கூறி அந்த பெண் அதிரடி காட்டினார். போலீசாருடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட அவர் ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசினார். இதனை காவலர் வெள்ளதுரை வீடியோவாக பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தான் வைத்திருந்த தொப்பியால் திடீரென தாக்குதலிலும் ஈடுபட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.