search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clash tomorrow"

    • இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது.
    • இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 26 ந் தேதி வரை இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது.

    இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், நேபாளம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    நாளைய தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோது கின்றன. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இரு அணிகளும் இதுவரை 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 11 போட்டியிலும் பாகிஸ்தான் 3 போட்டியிலும் வென்றுள்ளன. இந்திய அணியின் ஆதிக்கம் நாளையும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக நாளை பிற் பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ×