search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanest cities"

    நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டிலில் இந்தூர் முதலிடம் பிடித்தது. சூரத் 2-வது இடமும், விஜயவாடா 3-வது இடமும் பிடித்தது.
    சென்னை:

    தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்து உள்ளது.

    மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற துறை அமைச்சகம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    தூய்மை பணியில் சிறந்து விளங்கும் நகர்புற உள்ளாட்சிக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகினறன.

    2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டிலில் இந்தூர் முதலிடம் பிடித்தது. சூரத் 2-வது இடமும், விஜயவாடா 3-வது இடமும் பிடித்தது.

    தூய்மை நகரங்கள் பட்டிலில் சென்னை மாநகராட்சி 43-வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டில் சென்னை மாநகரம் 45-வது இடத்தினை பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.

    இந்த போட்டியில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 48 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றன. இதில் சென்னைக்கு தற்போது 43-வது இடம் கிடைத்து இருக்கிறது.

    இந்த தரவரிசையில் தமிழகத்தின் சார்பில் பங்கு பெற்ற சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

    சென்னை மாநகராட்சி

    இந்த ஆண்டுக்கான திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல் என்ற பிரிவின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு விருது கிடைத்து உள்ளது. இந்த விருதை மத்திய வீட்டு வசதி நகர்புற துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா வழங்கினார். அதனை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மனீஷ் பெற்று கொண்டார்.

    மேலும் திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின் பற்றுதல் என்ற விருதும் சென்னை மாநகராட்சிக் வழங்கப்பட்டது.

    ×