search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Colachel"

    குளச்சல் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    குளச்சல்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஷீலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமார், ரெகு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் குறும்பனையைச் சேர்ந்த தம்பதி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 1½ லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுபோல குளச்சல் பகுதியில் இன்னொரு நபரிடம் ரூ.60 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 400 பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ரூ. 2 கோடியே 33 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 623 கிராமம் தங்கமும், 1300 கிராமம் வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது மனைவி உஷா (29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணி மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் பாலப்பள்ளத்தில் உள்ள உஷாவின் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    குளச்சல் பள்ளிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (51). பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி சுதா (40). இவர் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத வருத்தத்தில் அவர் அதிகளவு மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தினகரன் இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). இவர் வக்கீலாக இருந்தார்.

    இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் மகன் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சதாசிவம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சதாசிவத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×