search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector amrith"

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு உயர்நி லைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத ்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உலக மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்துப்பள்ளிகளிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்து உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் செய்கை மொழி தமிழ்ந்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. உங்களுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை சுற்று தருகின்றனர்.

    எனவே, மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கல்வி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும், செய்கை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வண்ண ப்பென்சில்களையும், மாநில அளவில் நடைபெ ற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்தி றனாளி நல் அலுவலர் மலர்விழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) பிரியா, நாகஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அர்ஜூணன், பிரகாஷ், பள்ளித்தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் பியூலா, உதவி ஆசிரியர் (செய்கை மொழி) சாந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது.
    • பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஊட்டி

    எப்பநாடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு குத்துவிளக்கேற்றி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    இப்பகுதி மக்கள் மின்சார வசதி வேண்டியும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனா். இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலா்களும், உள்ளாட்சித் துறை அலுவலா்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் குழந்தைகளின் நலன் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது. அதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சாா்பில் உயா் ரத்தஅழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு இரண்டு மாதத்துக்கான மருத்துவப் பெட்டகத்தை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நம் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிலையினை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, எப்பநாடு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தினையும் வழங்கினாா். அதனை தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், எப்பநாடு ஊராட்சித் தலைவா் சிவகுமாா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் மரு.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.
    • நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

    ஊட்டி:

    சுதந்திர தினவிழாவையொட்டி, நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.இக்கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    சுதந்திர தினத்தி னையொட்டி, நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.

    ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

    இவா்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியத்துடன் பல்வேறு கடனுதவிகளும், வங்கிகள் மூலமாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மேலும், மகளிா் திட்டத்துறையின் சாா்பில், மகளிா் தங்கள் வாழ்வாதாரத்தினை உயா்த்தி கொள்வதற்காக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ஏராளமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிா்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுகொண்டார்.பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் அம்ரித் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று, ஊட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் பங்கேற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடன நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிலம்பாட்டம், போதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சுழல் கலைநிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் கலாசார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
    • பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 72 மனுக்களை பெற்றார்.

    ஊட்டி :

    ஊட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீா்வாய நிகழ்ச்சி (ஜமாபந்தி) தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கிவைத்து 12 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 11 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு என மொத்தம் 23 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 72 மனுக்களை பெற்ற அவா், மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

    அதனைத் தொடா்ந்து, தூனேரி உள்வட்டத்துக்கு உள்பட்ட தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, , கூக்கல், கக்குச்சி ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

    குன்னூா் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும், கோத்தகிரி வட்டத்தில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையிலும், பந்தலூா் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், குந்தா வட்டத்தில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், கூடலூா் வட்டத்தில் கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் முகமது குதரதுல்லா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகரன், தனி வட்டாட்சியா் குமாரராஜா, உதகை வட்ட வழங்கல் அலுவலா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    ×