search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inaugurated"

    ராமநாதபுரம் தபால் கோட்டம் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வங்கிச் சேவையினை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் தபால் கோட்டம் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வங்கிச் சேவையினை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கோட்ட கண்காணிப்பாளர் வீரபுத்திரன் வரவேற்றார். அஞ்சலக வங்கிச் சேவைக்கான முதலாவது கணக்கினை கலெக்டர் தொடங்கினார்.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் மொத்தம் 306 அஞ்சலக கிளைகள் செயல்படுவதாகவும் இவற்றில் கிராமப்புறங்களில் செயல்படும் தபால் நிலைய கட்டிடங்கள் மோசமான நிலையில் இருப்பதால் அரசுக் கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்ட கண்காணிப்பாளர் வீரபுத்திரன் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

    இது சம்பந்தமாக கடிதம் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து புதுடெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வங்கிச்சேவை நிகழ்ச்சி காணொலி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கி திறப்பு குறித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. கணக்கு தொடங்கியவர்களுக்கு கியூ ஆர் அட்டையை ராமேசுவரம் கோவில் தக்கார் குமரன் சேதுபதி வழங்கினார்.

    முதற்கட்டமாக ராமநாதபுரம் தலைமை தபால் அலுவகம், உச்சிப்புளி, மண்குண்டு, நாகாச்சி, ரெட்டையூரணி ஆகிய 5 இடங்களில் அஞ்சலக வங்கிச்சேவை தொடங்கப்படுகிறது.

    விழாவில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், தபால் துறை உதவி இயக்குநர் பாண்டியராஜன், தபால் உதவி கோட்ட கண்காணிப்பாளர் விஜயகோமதி, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஆயிரவைசிய மகாஜன சபை தலைவர் மோகன், பள்ளி தாளாளர் ஜெயக்குமார், நிர்வாகி பார்த்தீபன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×