search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector office cuddalore"

    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். மனு கொடுக்க வந்திருந்தவர்களை போலீசார் சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

    இந்நிலையில் திட்டக்குடியை அடுத்த இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சிவசக்தி (வயது 30) என்பவர் தனது மகன்கள் பிரக்கியன் (8), யாத்திரிகன் (4) ஆகியோருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டனர். சிவசக்தி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. சிவசக்தியின் கணவர் ராஜா திட்டக்குடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். இதனால் சிவசக்தி தனது 2 மகன்களுடன் வறுமையில் வசித்து வந்துள்ளார்.

    குடும்பம் வறுமையில் வாடியதால் சிவசக்தி அந்த பகுதியில் உள்ள சத்துணவு கூடத்தில் தனக்கு வேலை வழங்கும்படி பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை வழங்க வில்லை என தெரிகிறது. தனக்கு வேலை கிடைக்காததால் விரக்தியடைந்தார். இன்று காலை அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுக்க முடிவு செய்தார்.

    அப்போது அவர் தனது 2 மகன்களையும் அழைத்து வந்தார். சிவசக்தி தான் மறைத்து கொண்டுவந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×