என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "college girl missing"
- கடைக்கு செல்வதாக கூறி சென்ற கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
சின்னமனூர் கே.கே.குளம் பழனியாண்டி சேர்வை தெருவை சேர்ந்த ராஜா மகள் சிவரஞ்சனாதேவி (வயது19).
இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் அவரைதேடி வருகின்றனர்.
- தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக ேவலை பார்த்து வருகிறார். இவரது மகள் தர்ஷினி (வயது 22). டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த வாரம் தேனி கோட்டைக்குளம் உழவர் சந்தை பின்புறம் உள்ள சித்தி லதா வீட்டுக்கு வந்தார்.
அங்கிருந்து யாரிடமோ போனில் பேசி விட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி மேட்டு வலவு பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சந்திரசேகர் (வயது 24). இவரும் லோகேஸ்வரி (23) என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனிகாஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
மகளுக்கு மொட்டை எடுப்பதற்காக சந்திரசேகர் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் திருப்பூருக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வடமதுரை அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
- இந்த நிலையில் தேர்வு எழுதிச் சென்ற மாணவி திடீரென மாயமானார்.
வடமதுரை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மணிசேகரன் மகள் சுருதி (வயது19). இவர் அய்யலூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். கல்லூரியில் தேர்வு எழுதி விட்டு சொந்து ஊருக்கு செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் மாணவி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தஅவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமை யிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருதியை தேடி வருகின்றனர்.
- தேனி அருகே கல்லூரி மாணவி மாயமானார்
- மாயமான 2 பேர் குறித்து போலீசார் விசாரணை
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் அபிஷேக்(14). நேற்று வெளியே சென்ற அபிஷேக் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அபிஷேக்கை தேடி வருகின்றனர்.
கேரளமாநிலம் மூணாறை சேர்ந்தவர் காவியாமாலினி(21). இவர் உடுமலைபேட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த காவியமாலினி திடீரென மாயமானார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்