என் மலர்
நீங்கள் தேடியது "College Student Molested"
- போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
- போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார்.
கோவை:
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
நான் 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் புதிய சினிமா ஒன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்கு கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
சமூக வலைதளங்களில் வந்த அறிவிப்பை பார்த்து நான் பார்த்திபனை தொடர்பு கொண்டேன். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும், அங்கு வருமாறும் என்னை அழைத்தார்.
நானும் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் அவர் சொன்ன பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றேன். அங்கு பார்த்திபன் இருந்தார். அவர், தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என கூறி என்னிடம் கேள்விகள் கேட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்ததும் நான் மயங்கி விட்டேன்.
இதனை பயன்படுத்தி பார்த்திபன் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவரை நான் கண்டித்தேன். என்னை சமாதானம் செய்து உன்னை நிச்சயம் கதாநாயகி ஆக்குவேன் என்றார். இப்படி ஆசைவார்த்தைகள் கூறியே மீண்டும், மீண்டும் என்னை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். குழந்தை பிறந்தால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறி கருவையும் கலைக்கச் செய்தார்.
நான் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியபோது மறுத்தார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தெரியவந்தது. இதேபோல் மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியதையும் நான் அறிந்தேன். என்னை ஏமாற்றி கற்பழித்த பார்த்திபன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பார்த்திபன், பின்னர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கரூரைச் சேர்ந்த பார்த்திபன், சமீப காலமாக கோவை சரவணம்பட்டி கே.புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இங்கும் ஒரு பெண்ணை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகைகளை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. அந்த பெண் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.
- விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார்.
- கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து மேல்அரசம்பட்டு செல்லும் சாலையில் உள்ள கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஊசூர் அடுத்துள்ள தார் வழியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.
இதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மீது சரத்குமாருக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. மாணவி குடியாத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள ஒரு துணிக்கடையில் மாணவி வேலை பார்த்து வந்தார். அதில் வரும் சம்பள பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் சரத்குமார் மாணவி தனியாக செல்லும் நேரத்தில் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு மாணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரத்குமார் மாணவியை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார்.
தனக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை பிறந்த பொறுப்பு கூட இல்லாமல் மாணவியை அடைவதில் சரத்குமார் குறியாக இருந்தார்.
விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார். கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு மாணவி துணிக்கடையில் வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கத்தாரி குப்பத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார்.
ஆனால் அவரது தந்தை அங்கு அழைத்துச் செல்ல வரவில்லை. அந்த நேரத்தில் மாணவியின் வருகைக்காக சரத்குமார் முன்கூட்டியே அங்கு காத்திருந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற மாணவியை சரத்குமார் தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுத்து வற்புறுத்தினார்.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அப்போது சரத்குமார் மாணவியின் வாயில் துணியை கட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மாணவியை வேகமாக அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார். கை, வாய் ஆகியவற்றை துணியால் கட்டி வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இரவு 10 மணி அளவில் மாணவி வீட்டுக்குச் சென்றார்.
தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாயிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தார். அவர் இன்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறந்து ஒரு வாரமே ஆன தனது மகளை கொஞ்ச வேண்டிய சரத்குமார் பொறுப்பில்லாத தன்னுடைய வக்கிர புத்தியால் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. வீட்டிற்கு தனியாக சென்ற மாணவியை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடுகத்தூர் மேல்அரசம்பட்டு சாலை இருபுறமும் விவசாயம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏனாத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவர் வசிப்பதும் ஒரே பகுதி என்பதால் அவர்கள் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காதலர்கள் இருவரும் நேற்று இரவு செவிலிமேடு அருகே உள்ள குண்டு குளம் வயல்வெளி பகுதியில் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென காதல் ஜோடியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த காதலனை அவர்கள் தாக்கினர். மேலும் கல்லூரி மாணவியை கத்தியை காட்டி மிரட்டி காதலன் கண்முன்பே 4 வாலிபர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அந்த கும்பல் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று காதல் ஜோடியை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், மாணவனும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போதுதான் 4 பேர் கும்பலால் மாணவி சீரழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள நான்காவது கூட்டுப் பாலியல் வன்கொடுமை இதுவாகும்.
- மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தடையின்றி கிடைப்பது தான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும்.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்கு தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக்கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள நான்காவது கூட்டுப் பாலியல் வன்கொடுமை இதுவாகும். மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தடையின்றி கிடைப்பது தான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத்தர வேண்டும். போதைப்பொருட்கள் ஒழிப்பு, தீவிர கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் இனி எங்கும் பாலியல் வன்கொடுமை நடக்காத நிலையை தமிழக காவல்துறை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கல்லூரிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- கழிவறைக்கு சென்ற மாணவிக்கு அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி நிடாடா பகுதியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண்.
இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவரது தூரத்து உறவினரான வேன் டிரைவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமானார்.
கர்ப்பிணியாக இருந்ததை மறைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவிக்கு அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
மாணவி பிரசவ வலியால் கதறிய சத்தத்தை கேட்ட சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தையுடன் மாணவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவியும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு வேன் டிரைவரை கைது செய்தனர்.
- கல்லூரி மாணவியும் வாலிபரும் நட்பாக பழகினர். நேற்று நள்ளிரவு கல்லூரி மாணவி அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.
- போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மானியம் மாவட்டம் சீதம்பேட்டையை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி.
இவருடைய சகோதரருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எட்டிவளத்தில் உள்ள வட்டார அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருடன் கல்லூரி மாணவி தங்கி இருந்தார்.
அதே வார்டில் பாலகொண்டாவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக 23 வயது வாலிபர் தங்கி இருந்தார்.
அப்போது கல்லூரி மாணவியும் வாலிபரும் நட்பாக பழகினர். நேற்று நள்ளிரவு கல்லூரி மாணவி அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் கழிவறைக்குள் புகுந்தார். கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது மாணவி கத்தி கூச்சலிட்டார். வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த ஊழியர்கள் மாணவியை மீட்டனர். ரத்தப்போக்கு அதிக அளவில் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பாலகொண்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.
- வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர்.
- கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி.
இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். மாணவியை தனிமையில் அழைத்துச் சென்ற வாலிபர் அவருடன் உல்லாசமாக இருந்தார்.
மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வாலிபர் அந்த வீடியோவை தனது நண்பர்கள் 2 பேருக்கு அனுப்பி வைத்தார்.
வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர். தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார்.
தங்களுடன் உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்தால் காதலனோடு தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மாணவியை மிரட்டினர். இதனால் பயந்து போன மாணவி காதலனின் 2 நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தார்.
அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர்.
அவர்களும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதனால் விரக்தி அடைந்த மாணவி இது குறித்து அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார்.
அவர் தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவர் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கூட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் கைது செய்தனர்.
- மாணவி விடுதிக்கு சென்றதும் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினார்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக கே.யு.சி. போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவருடைய நண்பர் அகில். அன்வேஸ் அவரது காதலியுடன் அங்குள்ள ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
அப்போது அகில் எனது தோழி ஒருவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகிறார். அவளையும் கோவிலுக்கு அழைத்து வருகிறேன் என தெரிவித்தார் .
திட்டமிட்டபடி அன்வேஷ் அவரது காதலி மற்றும் அகில் அவரது தோழியான கல்லூரி மாணவி ஆகியோர் காரில் கோவிலுக்கு சென்றனர். நேற்று கோவிலில் இருந்து கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
வழியில் அன்வேஷ் தனது காதலியை வெங்கடாபூர் என்ற இடத்தில் இறக்கி விட்டார். பின்னர் அகில் மற்றும் அவரது தோழி ஆகியோருடன் காரில் சென்றனர்.
கோமாடிப்பள்ளி சோதனை சாவடி அருகே வந்தபோது அகிலின் தோழி காரை நிறுத்தும்படி கூறிவிட்டு அருகில் உள்ள புதர் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அவளது அழகில் மயங்கிய அன்வேஷ் அவளை அடைய வேண்டும் என திட்டமிட்டார். உடனே அவரது நண்பர் அகிலிடம் காரிலிருந்து இறங்கி கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி அகில் காரில் இருந்து இறங்கி கடைக்கு சென்றார்.
அந்த நேரத்தில் அன்வேஷ் புதர் பகுதிக்குச் சென்ற கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அகில் வருவதற்குள் இருவரும் காருக்கு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி அழுது கொண்டே இருந்தாள். இது பற்றி அகில் கேட்டபோது அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.
மாணவி விடுதிக்கு சென்றதும் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக கே.யு.சி. போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வேஷை கைது செய்தனர்.
- பிரசாந்த் விகாரில் காதலி தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் அவரை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் போல நடித்த ரவி சோலங்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லி பிரசாந்த் விகார் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று தனது காதலனுடன் காரில் தனிமையில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த ரவி சோலங்கி என்பவர் காதலர்கள் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
பின்னர் காதல் ஜோடியினர் அங்கிருந்து காரில் புறப்பட்டதும் அவர்களை ரவி சோலங்கி மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றார்.
பிரசாந்த் விகாரில் காதலி தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் அவரை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றார். இதை பின் தொடர்ந்து சென்று கண்காணித்த ரவி சோலங்கி உடனே அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்தார்.
படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை தடுத்து நிறுத்தி தான் ஒரு போலீஸ்காரர் என்று கூறி காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காட்டினார். இதை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சி அடைந்தார். தன் ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினார். இதற்கு மாணவி உடன்பட மறுத்தார். உடனே வலுக்கட்டாயமாக ரவி சோலங்கி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நடந்த விவரம் குறித்து மாணவி தனது காதலனிடம் கண்ணீர் மல்க கூறினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் போல நடித்த ரவி சோலங்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவி கதறி அழுதபடி அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு, பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
- போலீசார் மணிகண்டனை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
ராசிபுரம்:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
மாணவி, நேற்று மதியம் ஆண்டகளூர் கேட் பகுதியில் இருந்து, கல்லூரிக்கு செல்வதற்காக அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டார். அந்த வாலிபர், மாணவியை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர், அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சிங்களாந்தபுரம் கரட்டு பகுதிக்கு மாணவியை கூட்டிச் சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வாலிபரிடம் கேட்டபோது, மாணவியை மிரட்டி, அடர்ந்த முள்காடு பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியிடம் இது பற்றி வெளியே சொன்னால் தீர்த்துக்கட்டி விடுவேன் என மிரட்டி விட்டு, மாணவியிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்து சென்று விட்டான்.
இதையடுத்து மாணவி கதறி அழுதபடி அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு, பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார், முதலில் மாணவியை மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவியை பலாத்காரம் செய்தது ராசிபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மணிகண்டனை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, டிப்ளமோ படித்துவிட்டு, இவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒன்பதாம் பாலிக்காடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் ஊழியராக வேலை செய்து வரும், பெண்களிடம் அத்துமீறி நடப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது இளம்பெண் கடத்தல், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தல் என 366, 376, 394, 6-397 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைப்பதற்காக போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
தொடர்ந்து இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் புகார் பதிவு செய்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்ததை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கைதான மணிகண்டன், கடந்த 2016-ம் ஆண்டு திருச்செங்கோடு அருகே உள்ள ராயர்பாளையம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த பாவாயி (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். மணிகண்டன் குடிபோதையில் அங்கு செல்வார். இதனால் பாவாயி, மது குடித்து விட்டு வரக்கூடாது என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும், அவரது நண்பரும் அங்கு சென்று விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.
அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.
மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி உடலில் ஆடை இல்லாத நிலையில் நிர்வாணமாக கட்டப்பட்டு கிடந்தார். மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மாணவி மீட்கப்பட்ட வீடு உள்ள அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால், வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் விடுதியில் தங்கியிருந்த தன்னை அந்த வாலிபர் கடத்திச் சென்றதாகவும், பின்பு அவரது வீட்டுக்கு கொண்டுசென்று தன்னை கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்பு தன்னை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி அச்சுறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை கடத்தி நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கட்டி வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
- சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
சிங்கப்பூர்:
இந்தியாவை சேர்ந்த சின்னையா (வயது 26) என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த வழக்கில் சின்னையா கைது செய்யப்பட்டார்.
அந்த மாணவி, சம்பவத்தன்று இரவு பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்ற போது, அவரை சின்னையா வனப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மாணவியை அவர் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சின்னையாவின் மனநிலையை பற்றி பல மனநல மதிப்பீடுகள் தேவைப்பட்டதால் இவ்வழக்கு விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று கோர்ட்டு தெரிவித்தது.