search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collegestudent"

    • தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர்.

    கோவை,

    திருச்சியை சேர்ந்தவர் பரம தயாளன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம்

    கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் இல்லை. எனவே வெளியே அறை எடுத்து தரும்படி கேட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆகாசுக்கு கோல்டு வின்ஸ் இந்திரா நகரில் அறை எடுத்து கொடுத்தனர். அங்கு தங்கி இருந்து ஆகாஷ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போன் தொடர்ந்து சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறை உரிமையாளரை தொடர்பு கொண்டு அறைக்கு சென்று பார்க்கும்படி கூறினர்.

    உடனடியாக அறை உரிமையாளர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து தூர்நாற்றம் வந்தது. இதனையடுத்து அறை உரிமையாளர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ஆகாஷ் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து 3 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை பீளமேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பழகுவதை நிறுத்திய காதலியை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    கோவை:

    அன்னூர் அவினாசி ரோட்டை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் காரமடையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு கோவை சத்தி ரோட்டை சேர்ந்த மட்டன் கடையில் வேலை பார்க்கும் மகேந்திரன் (வயது 18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி மகேந்திரனுடன் பேசுவதையும், பழகு வதையும் தவிர்த்தார். சம்பவத்தன்று மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர் உன்னிடம் பேச வேண்டும் குட்டையூரில் உள்ள மதீஸ்வரன் மலைக்கு வருமாறு அழைத்தார். அதன் படி மாணவி மகேந்திரன் அழைத்த இடத்துக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழகுவதை நிறுத்திய காதலியை தாக்கிய மகேந்தி ரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர்.

    கோவை 

    கோவை நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2-வது, 3-வது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.


    இதில் ஆத்திரம் அடைந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து சிங்காநல்லூர், பீளமேடு போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாணவி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி பேஷன் டிசைன் படித்து வந்தார்.
    • மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    கோவை:

    கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்த மாணவி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி பேஷன் டிசைன் படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து மாணவியின் அறையில் பெற்றோர் ஆய்வு செய்த போது கடிதம் ஒன்று இருந்தது. இதனை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதில் மாணவி தன்னை தேட வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு ஹாட்கோ காலனியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், கடந்த மே மாதம் ராஜேஷ் என்ற இளைஞருடன் சென்றார். இளைஞரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறுமியை மீண்டும் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் உள்பட 2 பேரை மாணவர்களுடன் சேர்ந்து போலீசார் மடக்கி பிடித்தனர்
    • சாரிகாவின் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்து தப்பினர்.

    கோவை:

    நீலகிரி கொலக்கம்பையை சேர்ந்தவர் சாரிகா (வயது 19). இவர் கோவை மதுக்கரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது ேதாழியுடன் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர் திடீரென சாரிகாவின் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்து தப்பினர். இதைகண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தனது கல்லூரி நண்பர்களிடம் கூறினார். அவர்கள் மதுக்கரை ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ரோந்து பணியில் இருந்த மதுக்கரை போலீசார் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து செல்போனை பறித்த வாலிபர்களை துரத்தி சென்றனர். பின்னர் போலீசார் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிணத்துக்கடவு சொலவம்பாளையத்தை சேர்ந்த பிரவின் ராஜ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சாரிகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின் ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 20). இவர் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பொற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.

    இதனால் விக்னேஷ்வரி மற்றும் அவரது சகோதரர் தனது மாமா வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ்வரி கடந்த சில நாட்களாக தனது சகோதரரின் எதிர்காலத்தை குறித்து மனவேதனை அடைந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தென்மாவட்டத்தில் இருந்து வந்துள்ளீர்களா? என கேட்டு கல்லூரி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.

    கோவை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்(22). இவர் கோவை க.க.சாவடி பிச்சனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதி அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வினோத், தனது கல்லூரி நண்பர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த முகிலன்(20), கள்ளக்குறிச்சியை சேர்ந்த மனோஜ்குமார்(21) ஆகியோருடன் கல்லூரி அருகே உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றனர்.

    அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் வினோத் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் வினோத் மற்றும் அவரது நண்பர்களை கற்களால் தாக்கி மிரட்டி சென்றனர்.

    இதில் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் இது குறித்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தென்மாவட்டத்தில் இருந்து வந்துள்ளீர்களா? என கேட்டு கல்லூரி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை தாக்கிய பிச்சனூரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பர்வைசர் பூமணி(21), பிச்சனூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மற்றொரு தனியார் கல்லூரி கேண்டீன் கேஷியர் ரவிக்குமார்(19), பிச்சனூர் அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் முருகேசன்(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்
    • வடவள்ளி போலீசில் தஞ்சம் அடைந்தனர்

    வடவள்ளி,

    கோவை உப்பிலி பாளையம் ஜி.வி. ரெசிடென்சி வீதியை சேர்ந்தவர் மணிராஜ் (22). பேரூர் பகுதியில் லோடு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த வர் சுபாஷினி (19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மணிராஜூக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சுபாஷினி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் சுபாஷினியை மணிராஜ் கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்து இருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த மணிராஜூம், சுபாஷினியும் நேற்று மாலை வடவள்ளி போலீஸ்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் 2பேரும் வெள்ளலூரில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தை பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சுபாஷினியின் பெற்றோர் தங்களுடன் வரும்படி கூறி கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் சுபாஷினி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். காதல் ஜோடியினர் 2 பேரும் மேஜர் என்பதால் சுபாஷினியை அவரது காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பாசமாக வளர்த்த மகள் தங்கள் வார்த்தையையும் மீறி காதலனுடன் செல்வதை பார்த்து பெற்றோர் கண்கலங்கிய படி போலீஸ்நிலைய வாசலில் நின்றனர். பெண்ணின் பெற்றோர் நடத்திய பாசப்போராட்டம் அங்கு ேதாற்றுப் போனது. 

    ×