என் மலர்
நீங்கள் தேடியது "collision"
- நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.
- தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் யாத்திரை கணேசன் (வயது 57). இவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடர்ந்து அவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து நேற்று அவரது உடல் தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அவரது உடலுக்கு எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்) , முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், நிர்வாகிகள் அலாவூதீன், கோவி.மோகன், பூபதி, சதா.வெங்கட்ராமன், செல்வம் மற்றும் பலர் செலுத்தினர். இதனை தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.
- கொடுமுடி அருகே உள்ள வளந்தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர்.
- படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள வளந் தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர்.
ஒத்தக்கடை அருகே என்ற பகுதியில் மாலை 6 மணி அளவில் சென்றபோது காரும் கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளே இருந்த ஊட்டி கலைஞர் நகரை சேர்ந்த ரவிக்குமார் (70) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரில் இருந்த வளந்தாங் கோட்டையைச் சேர்ந்த கார்த்தி, சங்கர், செந்தில், குப்புசாமி, சசிதரன், சரவணன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து டிரைவர் தப்பி சென்று விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 6 பேரையும் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்ப–ட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
- விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 67).
இவர் சேந்த மங்கலத்தில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். தனது உணவகத்தில் இருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு தினமும் அவர் உணவு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று திருவாரூர் கடை தெருவிற்கு சென்று வீட்டிற்கு தேவை யான காய்கறிகளை வாங்கிக் கொண்டு சேந்தமங்க லத்திற்கு வந்துள்ளார்.
அங்கு அவரது உணவகத்திலிருந்து உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று கொடுத்துவிட்டு, பேக்கரி வாசலில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக திருவாரூர்-மயிலாடு துறை சாலையில் சென்றுள்ளார்.
அப்போது திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டனர்.
விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).
லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார்.
புதுச்சேரி:
திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்தை சேர்ந்த வர் காத்தவராயன் மகன் ஜெயபால். (வயது 34 )இவர் புதுச்சேரி மாநிலம் சேத ராப்பட்டில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இவர் தினந்தோறும் பேரணியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூல மாக வேலைக்கு சென்று விட்டு திரும்பி பேரணி கிரா மத்துக்கு செல்வார். நேற்று இரவு வேலை முடிந்து விட்டு வழுதா வூரில் நடைபெற்ற தனது நண்பர் விசேஷத்தில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் மூலமாக பேரணி நோக்கி சென்று கொண்டி ருந்தார்,
விக்கிரவாண்டி போலீஸ் கோட்டர்ஸ் அருகே செல்லும் பொழுது முன்னாள் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சென்றவர் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பின்னால் சென்று கொண்டி ருந்த ஜெயபால் பின்னால் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பழுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.புகார் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ஜெயபாலுக்கு சாந்தி என்ற மனைவியும் சக்தி என்ற மகளும் உள்ளனர்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை வசிப்பவர் வேலுச்சாமி, இவரது மகள் சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சீர்காழி - புறவழிச்சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாதனா மீது மோதிவிட்டார். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிவிட்டார்.
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சாதனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது.
- தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்
சேலம்:
சேலம் மாவட்ட ஆயு–தப்–ப–டை–யில் போலீஸ்–கா–ர–ராக அன்–பு–தா–சன் (வயது 35) என்–ப–வர் பணி–யாற்றி வரு–கி–றார். டிரை–வ–ரான அவர் நேற்று போலீஸ் வாக–னத்–தில் 2-ம் நிலை காவ–லர் தேர்–வுக்கு பயன்–ப–டுத்–தப்–பட்ட பொருட்–களை ஏற்–றிக்–கொண்டு மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–துக்கு சென்–றார். பின்–னர் பொருட்–களை அங்கு இறக்கி வைத்–து–விட்டு மீண்–டும் ஆயு–தப்–ப–டைக்கு வாக–னத்தை ஓட்டி வந்து கொண்–டி–ருந்–தார்.
அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது. இதில் தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு டாக்–டர்–கள் பரி–சோ–தனை செய்த போது, அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்.
இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் செவ்–வாய்–பேட்டை போலீ–சார் அங்கு விரைந்து சென்று விசா–ரணை நடத்–தி–னர். இதில் இறந்–த–வ–ரின் சட்–டைப்–பை–யில் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் பொதுப்–பி–ரி–வில் புற–நோ–யா–ளி–யாக சிகிச்சை பெற்–ற–தற்–கான சீட்டு இருந்–தது. அதில் ரவிக்–கு–மார் (37)
- மோட்டார் சைக்கிளில் தலச்சங்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
- அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே தலச்சங்காடு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 61).ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தலச்சங்காடு மெயின் ரோட்டில் மல்லேஸ்வரர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செம்பனார்கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த மகாலிங்கத்திற்கு கலாவதி என்ற மனைவியும், ரேணுகா, ஹேமா, கிருத்திகா என்ற 3 மகள்களும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
- பஸ்ஸின் பக்கவாட்டில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக மோதினார்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலியாகினர். அதன் விவரம் வருமாறு :-
தஞ்சாவூர் பட்டுக்கோ ட்டை புறவழி சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி (வயது 22).
இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது பாலத்தில் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட உதயநிதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதேபோல் தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27 ).
இவர் தஞ்சை மாரியம்மன் கோவில் ஆர்ச் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது நாகையிலிருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ்ஸின் பக்கவாட்டில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராத விதமாக மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது .
இதில் உடல் நசுங்கி சந்தோஷ் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த 2 விபத்துக்கள் குறித்தும் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி
- அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தார்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 22), விசைத்தறி தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பூலாவரி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த லோகநாதன் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் சாமி ஆட வந்துள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் சாமி ஆடிய போது தகராறு ஏற்பட்டு, கோவிந்தராஜை மற்ற இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், லோகு என்ற லோகநாதன் (25), சச்சின் (20) ஆகிய 2 பேர் மீதும் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- பள்ளி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
- மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியது.
திருவோணம்:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் வயது 33. இவர் ஒரத்தநாடு பாப்பநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு மோட்டரர் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திருவோணம் அருகே ராஜாளி விடுதி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இருந்தார்.
இது தொடர்பாக திருவோணம்போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
- கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த லோகநாதனுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.