search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "comedian"

    • காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்
    • தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார்

    ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் நேற்று இரவு நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி காமெடியனின் முகத்தில் நபர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேமி கரவாகா என்ற ஸ்டான்ட் அப் காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

    அந்த நிகழ்ச்சியில் ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில், காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு ஆல்பர்டோவின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.

     

    இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ நேராக விறுவிறு என மேடைக்கு சென்று காமெடியன் ஜேமியின் முகத்தில் ஒரு குத்து வைத்து அவரை நிலைகுலையச் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனைத்தொடர்ந்து ஜேமி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆல்பெர்ட்டோ ஜேமியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

    • சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
    • ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

    தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.

     

    விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

     

    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.
    • நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

    தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.

    ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    இதற்கு அடுத்து  வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர்.

    அதன்பின்னர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

     

    40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ராஜு ஸ்ரீவஸ்தவா நம் வாழ்வை சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை உணர்ச்சிகளால் பிரகாசமாக்கினார். அவர் விரைவாக நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அவரது செழுமையான பணியால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "ராஜு ஸ்ரீவஸ்தவா இப்போது நம்முடன் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய உ.பி. மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×