search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "community certificate"

    ஆனைகட்டி மலை கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 128 பேருக்கு ஜாதி சான்றிதழை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான ஆனைக்கட்டி மலை கிராமத்தில் உள்ள ஜம்புகண்டி கே.கே.நகரில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வடக்கு தாசில்தார் சிவகுமார் வரவேற்றார். அம்மா திட்ட முகாமில் ஆனைக்கட்டி, பெரிய ஜம்புகண்டி, சின்ன ஜம்புகண்டி, ஆலமரமேடு, கொண்டனூர், கொண்டனூர்புதூர், தூமனூர், சேம்புகரை உள்ளிட்ட ஆதிவாசி கிராங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் தொகுதி வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு 128 பேருக்கு இருளர் ஜாதி சான்றிதழ், 18 பேருக்கு முதியோர் உதவித்தொகை சான்றிதழ் வழங்கினார். மற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஆரம்ப சுகாதார துறை, கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை, காவல்துறை சார்பாக அதிகாரிகள் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். இதில் ஓ.ஏ.பி தாசில்தார் சகுந்தலாமணி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி, கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×