search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commuters sit"

    • பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ் போன்ற பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த நிழற்குடை பயன்பட்டு வருகிறது.
    • வயதான முதியோர்கள் இதில் ஏறுவதற்கு முயற்சி செய்தால் தடுமாறி கீழே விழும் அவல நிலைதான் உள்ளது.

     குனியமுத்தூர்,

    கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் அமருவதற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

    அவற்றில் பெரும்பாலான நிழற்குடைகள் போதுமான வசதி இல்லாமல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குறிப்பாக கோவை-பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் பகுதியை அடுத்த எல்.ஐ.சி காலனி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் ஏறி அமரும் அளவிற்கு அது இல்லாத நிலையில் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டுதான் இருப்பதை காண முடிகிறது. இன்னும் ஒரு சில பயணிகள் பஸ்சை எதிர்பார்த்து நீண்ட நேரம் நின்று கால் வலிக்கும் காரணத்தால், கீழே தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலையை காண முடிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிழற்குடை, தேவை இல்லாமல் இங்கு எதற்கு நின்று கொண்டி ருக்கிறது என்பது தெரிய வில்லை.

    பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்படாமல், ஏனோதானோ என்று நிறுவப்பட்ட நிழல் குடையால் யாருக்கு என்ன பயன்? குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரும் பெண்கள் கண்டிப்பாக இதில் ஏறி அமர முடியாது.

    மேலும் வயதான முதியோர்களும் இதில் ஏறுவதற்கு முயற்சி செய்தால் தடுமாறி கீழே விழும் அவல நிலைதான் உள்ளது .பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ் போன்ற பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த நிழற்குடை பயன்பட்டு வருகிறது. எனவே பயணிகள் அமரக்கூடிய வகையில் நிழற்குடையை சரியான தத்தில் அமைத்தால் மட்டுமே இது பயன்பாட்டிற்கு வரும்.

    இல்லையென்றால் மழைக்கு ஒதுங்குவதற்கு மட்டுமே இது பயன்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நல்லது.

    பஸ்காக காத்திருக்கும் பயணிகளும் சற்று இளைப்பாரி அமரக்கூடிய சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×