என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Compassionate pension"
- கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
- சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார்.
கடலூர்:
கூட்டுறவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கருணை ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அறிவிக்கும் போனஸ் மற்றும் கருணை தொகையை அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். நியாய விலை கடை ஊழியர்களிடம் இருப்பு குறைவிற்கு 3 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் வேல்முருகன், சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல், கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் கருப்பையன் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.