என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Competition"

    • மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
    • இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    உலக மாற்றுத்திற னாளிகள் தினத்தை முன்னிட்டு, செரிபரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோ

    சியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேர்மன் உமாராணி தலைமை வகித்தார். தலைவர் பரணிதரன், செயலாளர் சித்தேஸ்வரன், பொருளாளர் காருண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், தர்மபுரி, சென்னை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அணிக்கு 7 பேர் அடிப்படையில் லீக் சுற்று போட்டிகளாக நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் சேலம்-தேனி அணிகள் மோதின.

    இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிப்பிரியா, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தனர்.
    • தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும்.

    தஞ்சாவூர்:

    நான்காவது தேசிய அளவிலான சிலம்ப போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. சிலம்பம் இந்திய சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு முதலிடமும், புதுச்சேரி இரண்டாமிடமும், கர்நாடக மூன்றாமிடமும் பிடித்தது.

    மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மட்டுமே தேசிய போட்டிக்கு தேர்வானவர்கள்.

    தஞ்சை மாவட்ட செயலாளர் லோக கலாஸ்ரீ ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் இருந்து மாநில வெற்றியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் தமிழ்நாடு சங்க தலைவர் சந்திரமோகன், துணை தலைவர் பொன் ராமர், செயல் தலைவர் கண்ணதாசன் மற்றும் சிலம்பம் தஞ்சை மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதுகுறித்து, பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில்:- மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற தயாராகி வருகின்றனர்.

    அவர்களுக்கு மலேசியாவில் நடைபெறும் சிலம்பம் சர்வதேச போட்டியில் பங்கு பெற அரசு நிதியுதவி அளித்தால் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பர். தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும் என்றார்.

    • கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட்டேனியல் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக வருங்காலங்களில் ஏப்ரல்-2023 முடிய நடை பெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள உள்ள தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்திட உத்தேசிக்கப் பட்டுள்ளது.

    ேமலும் தேர்வு போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

    வளை கோல்பந்து விளையாட்டிற்கு (மாணவர்கள் மட்டும்) 13.12.22 அன்று அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் சிவகங்கையிலும், கையுந்து பந்து விளையாட்டிற்கு மாணவ- மாணவியர்களுக்கு 13.12.22 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னை–யிலும், கால்பந்து விளையாட்டிற்கு (மாணவிகள் மட்டும்) 13.12.22 அன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையிலும், 0 விளையாட்டிற்கு மாணவ-மாணவிகளுக்கு 14.12.22 அன்று ஜவஹர் லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னையிலும் நடைபெற உள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள், வயது வரம்பு 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.

    ஆதார் கார்டு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ், நகராட்சி / கிராம நிர்வாக அலுவலரிட் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் (ஜனவரி 2012 ஆம் ஆண்டிற்குள்ளும் 5 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்).

    தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து தேர்வு போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்கண்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட பிரிவு அலுவலக தொலைபேசி எண் 04362-235633 என்ற எண்ணிலும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண் 7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி உள்ளரங்கில் நடந்தது.
    • அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி உள்ளரங்கில் நடந்தது.

    இப் போட்டியில் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி குளுனி சி.பி.எஸ்.இ. பள்ளி, தி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும் தி ஸ்டடி எக்கோல் சர்வதேச பள்ளி ஆகிய 7 பள்ளிகளும் போட்டியில் பங்கேற்றன.

    அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்த கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டிக்கு பாதரியார் லூர்து வில்சன், ஆன் டனி தாஸ் ஸ்டாலின் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

    இப்போட்டியில் பண்ருட்டி தி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், குளூனி சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசு, பண்ரூட்டி ஜான் டூவிமெட்ரிக் மேல்நிலைபள்ளி 3-ம் பரிசும் பெற்றது.

    தூய இருதய ஆண்டவர் பசிலிகா பாதிரியார்கள், குழந்தைசாமி, டெலமோர், உப்பளம் புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலய பாதிரியார் அருள் புஷ்பம் மற்றும் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான லூர்து சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.

    இந்நிகழச்சியினை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள் மதுமிதா, பிரசன்னா மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி ஜெயபாரதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    அமலோற்பவம் லூர்து அகாடமி மாணவி மோகனபிரியா நன்றி கூறினார்.

    • மின்சிக்கன வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய மாரத்தான் ரோவர் ஆர்ச், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு சந்திப்பில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரி அம்பிகா கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். விழாவில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மாநில அளவிலான 38-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி 3-வது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. சாதனை படைத்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளியின் செயலர், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்தினர்.

    • தென்மாநில அளவிலான சிவப்பு நாடா மன்றங்களின் வினாடி-வினா போட்டி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.
    • தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜோதிகா சீமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    தென்மாநில அளவிலான சிவப்பு நாடா மன்றங்களின் வினாடி-வினா போட்டி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் ஜெயராம் ஓட்டலில் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,தெ லுங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் பங்கு பெற்றன.

    போட்டிகளை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் சித்ரா தேவி, தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் தகவல் ெதாடர்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜோதிகா சீமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் 65 புள்ளிகளுடன் புதுவை முதல் இடத்தை பிடித்தது. புதுவை அணி சார்பில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவி ஹர்ஷிதா, வில்லியனூர் கஸ்தூரிபாய் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மணி ராஜஸ்ரீ ஆகியோர் முதல் பரிசை வென்று புதுவைக்கு பெருமை சேர்த்தனர். 2-வது இடத்தை அந்தமான் நிகோபர் அணியும், 3-வது இடத்தை ஆந்திராவும், 4-வது இடத்தை கோவாவும் பிடித்தன.

    போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை எய்ட்ஸ் கட் டுப்பாட்டு சங்கத்தின் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனர் சேதுராமன், உதவியாளர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையின் டாக்டர் சவுந்தர்யா நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்ட அளவில் கலைத்திருவிழா கடந்த வாரம் 7 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
    • 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 11 ஆயிரத்து 474 பேர் பங்கேற்றனர். முதல் இடங்களை பிடித்த 536 பேர், மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவில் கலைத்திருவிழா கடந்த வாரம் 7 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 11 ஆயிரத்து 474 பேர் பங்கேற்றனர். முதல் இடங்களை பிடித்த 536 பேர், மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

    இப்போட்டி சென்னை,

    கோவை, மதுரை, திரு வள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ளில் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக தேர்வு பெற்ற மாணவ- மாணவி களை அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் ஒருங்கி ணைப்பாளர்களாக நிய மிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று சேலம்

    அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் நடந்தது. அதில், மாணவர்களை அழைத்துச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.

    • போட்டியில் அரியலூர் மாணவர்கள் 1023 பங்கேற்றனர்
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டி நடைபெற்றது. அரியலுார் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், திருமானுார் ஆகிய 6 வட்டாரங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 353 அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 6 முதல் 8ம் வகுப்பு, 9-10, 11-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை, நுண்கலை, மொழித்திறன், நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி அளவில் 20 ஆயிரத்து 42 மாணவர்களும், வட்டார அளவில் 4 ஆயிரத்து 991 மாணவர்களும், மாவட்ட அளவில் ஆயிரத்து 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளனர். இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறும்போது:- இதுபோன்ற கலைத்திருவிழாப் போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே உள்ள கலைத்திறனை வெளிப்படுத்தி அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது என்று அவர் கூறினார்.


    • உடற்கல்வித்துறை இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
    • தேசிய குத்துச் சண்டை போட்டி அரசு கல்லூரி மாணவர்கள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    கரூர்:

    தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் வரும் 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் குமார், கார்த்திக்ராஜா ஆகியோர் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.




    • கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்
    • வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார்

    மணப்பாறை:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கலைத் திருவிழா 2022-23க்கான போட்டிகள் ஓவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கவிதை எழுதுதல் எனும் தலைப்பில் மணப்பாறையை அடுத்த கருத்தகோடங்கிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி யோகப்பிரியா முதலிடம் பிடித்தார். மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தமிழாசிரியை எழிலரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமைஆசிரியை லீமா ரோஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


    • இந்திய கோ-கோ போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • பல்கலைக் கழகங்கள் சார்பில் ஆண்களுக்கான கோ -கோ போட்டியானது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

    கரூர்:

    பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்திய கோ-கோ போட்டியில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். பல்கலைக் கழகங்கள் சார்பில் ஆண்களுக்கான கோ -கோ போட்டியானது கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிபிராஜ், சேது ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜேந் திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.




    ×