search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complication"

    • பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது.
    • ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.

    பெண்ணின் வயிற்றுக்குள் 3 ஆண்டுகளாக இருந்த ஊசியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 49 வயதான ரம்பா தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஊசியை வைத்து துணி தைத்துக்கொண்டிருந்தபோது ஊசியை படுக்கையில் வைத்திவிட்டு எழுந்துள்ளார். பின் நிலை தடுமாறி படுக்கையில் இருந்த ஊசியில் மீது விழுந்துள்ளார்.

    இதனால் பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது. ஆனால் ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார். ஊசி உள்ளே இறங்கும்போது அவரின் வயிற்றில் ஏற்பட்ட வலி, தவறி விழுந்ததால் ஏற்பட்டது என்று நினைத்துள்ளார்.

    நாளாக நாளாக அவரின் இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. 3 வருடங்களாக வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் அவரின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தபோது பாதி உடைந்த ஊசி உள்ளே இருத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறிய பொருள் என்பதால் முதலில் வயிற்றுக்குள் ஊசி எந்த இடத்தில் இருக்கிறது என கண்டுபிடித்து அகற்றுவது சிக்கலான ஒரு வேலையாக இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு தயக்கம் இருந்தது.

     

     

    இதன்பின்னர், சி-ஆர்எம் என்ற மேம்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்ப இயந்திரம் மூலம் ஊசியை துல்லியமாகக் கண்டறிய பல எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு இறுதியாக, ஊசியைக் கண்டுபிடித்து அதை உடைக்காமல் ஒரே துண்டாகப் பிரித்தெடுத்தது இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் ரம்பா தேவி நலமாக என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    ×