என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Computer Science Forum"
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை (சுயநிதி பிரிவு) மன்ற தொடக்க விழா நடந்தது.
- கல்லூரி முன்னாள் மாணவர் அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை (சுயநிதி பிரிவு) மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சகாய ஜெயசுதா வரவேற்று பேசினார்.
கல்லூரி முன்னாள் மாணவரும், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியுமான அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் திறன் மேம்பாடு, நேர்முக தேர்வுக்கு தயார் செய்வது குறித்து விளக்கி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் மன்ற செயலாளர் ஸ்ரீராம் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
விழாவில் கணினி அறிவியல் துறையை சேர்ந்த ஆக்னஸ் ஸ்டெபி, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் ராஜேஷ், சிங்காரவேலன் மற்றும் மகேஸ்வரி, ஆங்கிலத்துறை போராசிரியர்கள் அந்தோணி பிரைட் ராஜா, சுகாசினி, வணிகவியல் துறை பேராசிரியர்கள் சிரில் அருண், திருச்செல்வம், கரோலின் கண்மணி ஆனந்தி, ஜெயராமன், பார்வதி தேவி, டயானா ஸ்வீட்லின், ரூபன் ஜேசு அடைக்கலம், சுமதி மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.