என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "confirm"
- புலிக்குத்திகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டை போட்டு கொன்று உயிர்நீத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
- தொல்லியல்துறை அதிகாரிகள் புலிக்குத்தி கல்லை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை,
கோவை உக்கடம்-சுங்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதற்காக அங்கு ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்குள் இருந்து புலிக்குத்திக்கல் மீட்கப்பட்டு உள்ளது. இதனை தொல்லி யல்துறை அதிகாரிகள் மீட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மாநகரின் மையப்பகுதியில் புலிக்குத்தி கல் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புலிக்குத்தி கல் சிற்பத்தை ஆய்வுசெய்து வரும் கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது:-
இது 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம். இதில் அடர்ந்த காடுகளை அழித்து இந்த பகுதியில் சிவன் கோவில் கட்டப்பட்டு உள்ளதாக17-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழனின் பூர்வ பட்டயத்தில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் அடர்ந்த காடுகளை அழிக்க பெண் தெய்வம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. எனவே மன்ன்ன கரிகாலன் விலங்குகளை பலி கொடுத்து சிவன் கோவிலை கட்டினான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
புலிக்குத்திகல் சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியுடன் சண்டை போட்டு கொன்று உயிர்நீத்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
எனவே அந்த வீரனின் நினைவை போற்றும் வகையில் அந்த கால ஆட்சியாளர்கள் இங்கு புலிக்குத்தி நடுகல்லை வைத்து இருக்க லாம் எனவும் கருதப்படுகிறது.
புராதன காலத்தில் கோவை மாவட்டம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்து உள்ளன. எனவே அப்போதைய அரசன் அந்த பகுதிகளில் உள்ள தெய்வங்களுக்கு விலங்குகளை பலிகொடுத்து கோவன் புத்தூர், இருகூர், வெள்ளலூர், துடியலூர் ஆகிய பகுதிகளை உருவாக்கி உள்ளான்.
மேலும் கோவை மாவட்டத்தில் எண்ணற்ற புலிக்குத்தி கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த வேண்டும். இதுதவிர அந்த சிற்பம் மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் நடுகல்லை நட்டு வைத்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே தொல்லியல்துறை அதிகரிகள் புலிக்குத்தி கல்லை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவற்றை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை உக்கடம் சுங்கம் சாலை விரிவாக்க பணிக்காக மட்டுமே நடுகல் சிற்பம் அகற்றப்பட்டு உள்ளது. அங்கு பணிகள் முடிந்த பிறகு புலிக்குத்தி கல் மீண்டும் நிர்மாணிக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்