search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congregation"

    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மாவட்டச்செயலாளர், தினாஜ்கான் உள்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை யகத்தில் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமயில் நடந்தது.

    மாவட்ட தலைவர் இப்ராகிம் சாபிர், மாவட்ட செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஜபுதீன், உஸ்மான், மீரான், கீழை சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தில் புகழ்பெற்ற சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வ நாதன், தர்மபுரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி களின் அங்கீகாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கிறோம். மத்திய அரசின் இந்த ேபாக்கால் மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள்.

    மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.மாவட்டச்செயலாளர், (ஊடகத்தொடர்பு) தினாஜ்கான் உள்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    • ராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • வருகிற 21-ந் தேதி சென்னையில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் நடந்தது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் தியாகராஜன் கலந்துகொண்டார்.

    அவர் கூறுகையில், வருகிற 21-ந் தேதி சென்னையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. அதில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 53 ஆயிரம் தொகுப்பு ஊதியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் காலமுறை ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தினர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கான உத்தரவில் கையெழுத்தை போட்டு வாழ்வாதாரத்தை உருவாக்கினார்.

    அவருக்கு கடலில் பேனா வைப்பதை ஆசிரியர் சமூகம் வரவேற்கிறது. அதை நினைவுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கப்பட உள்ளது என்றார்.

    ×