என் மலர்
நீங்கள் தேடியது "construction work"
- செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பெரியமார்க்கெட் வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர்.
- தனியார் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி நகரக்குழு சார்பில் நேருவீதி- காந்தி வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். சீனியர் தலைவர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பெரியமார்க்கெட் வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர்.
4 ஆயிரம் குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ள பெரிய மார்க்கெட்டை சீர்குலைக்கக் கூடாது. கட்டுமான பணிகளை படிப்படியாக செய்ய வேண்டும். மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிட வசதி செய்ய வேண்டும். நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
முத்தியால்பேட்டை மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சன்டே மார்க்கெட் வியாபாரிகளிடம் தனியார் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 84-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமூளை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படுகிறது.
84-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
இப்பள்ளியில் மூன்று வகுப்பறை கட்டிடம் மட்டுமே இருந்ததால், தற்போது இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிதி முழுவதையும் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் வழங்கி உள்ளார்.
ஆனால் கட்டிட பணிக்கு மாணவர்களை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் கடப்பாறை எடுத்து குழி தோண்டுவது, செங்கல் உடைப்பது, சாந்து சட்டி மூலம் மண் சுமப்பது, இரும்பு கம்பிகளுக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டிடத்திற்கு மேல் நின்று ஆபத்தான நிலையில் தண்ணீர் பிடிப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளனர்.
மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களை படிக்கவிடாமல் தடுத்து, கட்டிட பணிகளுக்கு பயன்படுத்துவதாக வேதனை அடைந்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுமான பணி, எச்சரிக்கை, Construction work, warning
கீழக்கரை
கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கீழக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் பெரிய கட்டுமானங்கள், வணிக வளாகங்கள் கட்டுவ தற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் தெரு பகுதி களில் வணிக வளாகங்கள் அமைப்பது குறித்து உரிய விதிமுறைகள் பின்பற்றி கட்டுமான பணிகளை மேற் கொள்ள வேண்டும்.
புதிய கட்டுமான பணி களுக்கு அரசின் விதிமுறை கள் தெளிவாக வரையறுக் கப்பட்டுள்ளது. அதன் படி புதிதாக கட்டுமான பணி களில் ஈடுபடுபவர்கள் உரிய அரசு அனுமதி பெற்று கட்டு மான பணிகளில் ஈடுபட வேண்டும்.
மேலும் விதி முறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நகரில் அதிக உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது குறிப்பாக வணிக வளாகங்கள் உரிய அனுமதியோடு கட்ட வேண் டும். நகராட்சி விதிமுறை களை மீறி மிக உயரமான வணிக வளாகங்கள் ஏற் படுத்தியிருந்தால் அதற்கு உரியவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
- படித்துறை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
இக்குளத்தில் படித்துறை இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அரசு கோரிக்கையை ஏற்று பொது நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதிக்குழுவில் இருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியசாமிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மரிய ஆரோக்கிய சூசை, துணை தலைவர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.
- தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.
- மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.
திருவாரூர்:
கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.
சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.
மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசு அதனை கைவிட வேண்டும்.
தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆர்ப்பா ட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்கள் பாஸ்கர், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அலங்காநல்லூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- குடியிருப்பு கட்டுமான பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு சேதமடைந்து இடியும் நிலையில் காணப் பட்டது. இதனால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வருவாய்த் துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் ரூ.30.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலு வலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதே இடத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.
சுமார் 150 மீட்டர் நீளத்திலும், 120 மீட்டர் அகலத்திலும் பஸ் நிலையம் கட்டுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இதில் ஒவ்வொரு தூண்களும் சுமார் 4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 35 பஸ்கள் நிறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்பட உள்ளன. இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கும் தனியாக வாகன நிறுத்துமிடமும், 100-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளும் கட்டப்பட உள்ளன.இந்த கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாகவும், இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ராமநாதபுரத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நவாஸ்கனி எம்.பி. ஆய்வு செய்தார்.
- பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்
தமிழக அரசின் உத்தர வுப்படி ராமநாதபுரத்தில் பழைய பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புதிய பேருந்து நிலையத்தில் சரி வர முறையாக பணிகள் நடைபெறவில்லை என்றும், கட்டுமான பணிக்கு பயன்ப டும் இரும்பு கம்பிகள் துருப் பிடித்து உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.யிடம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் முறையிட்டனர்.
அதன் பேரில் பாராளு மன்ற உறுப்பினர் நவாஸ் கனி திடீரென புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். உடன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். பின்னர் நவாஸ் கனி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய விரிவாக்கம் செய் யப்பட்டது. தற்போது இது தரமாக கட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்தேன். தொடர்ந்து இனி நான் ஆய்வு செய்வேன். ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெ டுவிற்குள் முழுமையாக புதிய பேருந்து நிலைய கட்டிட பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர் என்றார்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளான மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லா கான், மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் ரஹ்மான், ராமநாதபுரம் நகர் தலைவர் காசிம், செயலாளர் சிராஜ் தீன், செயலாளர் அஜ்மீர், மாநில ஊடகவியல் செயலா ளர் சபீர், எஸ்.டி.யூ. மாவட்ட பொருளாளர் மோகன், காங்கிரஸ் நகர்மன்ற உறுப் பினரும், மாவட்ட பொறுப்பு குழு தலைவருமான ராஜா ராம் பாண்டியன் (எ) கோபால்,
காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, கம்யூனிஸ்ட் கட்சி வக்கீல் முருகபூபதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேஷ் செல்வராஜ், கலையரசன் குருவே சந்தா னம், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், பொறியாளர் சீனிவாசன், வட்டார தலைவர் சேது பாண்டி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்த திரளாக கலந்து கொண்டனர்.
- அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை `அருணாசலேசுவரர் கோவில் முன்பு புதிதாக கட்டப்பட உள்ள கடைகளுக்கான கட்டுமான பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6 கோடியே 40 லட்சம் மதிப்பில் கடைகள் கட்டப்பட உள்ளது.
புதிய கடைகள் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் டிஎம் சண்முகம், ராஜசேகர், தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், கோவில் மணியம் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார்.
- பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் மாவட்ட கலெக்டர் பழனி ஒரத்துார் ஊராட்சி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ 12லட்சத்து 31ஆயிரத்து 400 மதிப்பீட்டில் செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார்.
வேம்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியையும், ஏரிக்கரையில் ரூ16.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய பொது கிணறையும், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வை யிட்டு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னார்.
இந்த ஆய்வின்போதுகூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், செயற் பொறி யாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் , ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன் உட்பட அரசு பணி யாளர்கள் உடனிருந்தனர்.