search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting chaired by Ministers"

    • ஆலோசனை கூட்டம் காரணமாக பி.ஏ.பி. விவசாயிகள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள–தால் ஆனைம–லையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சி

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கோவை, திருப்பூர் மாவட்ட பி.ஏ.பி விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சியில் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அது தொடர்பாக வருகிற 1-ந் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஆழியார் அணையில் இருந்து ஓட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக கூட்டு குடிநீர் திட்டம் ஒன்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி உத்தேசித்துள்ளது. இதற்கு பி.ஏ.பி.பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    எனவே இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து சுமுக தீர்வுகாண நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வருகிற 1-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கூட்டத்தில் பி.ஏ.பி.விவசாயிகள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் விவசாய பிரதிநிதிகள், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரும் 1-ந்் தேதி அரசு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டதுடன், நாளை நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அரசு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என பி.ஏ.பி. முன்னாள் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.

    இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள–தால் ஆனைம–லையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஆனைம–லையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் நீர்ப்பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கும் வகையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் பிஏபி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் திட்டத்தை அரசு கைவிடு வதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழை–ப்பது விவசாயிககளையும், பொதுமக்களையும் ஏமாற்றும் செயல். பேச்சுவார்த்தை அவசியம் இல்லாத ஒன்று. திட்டத்தை அரசு கைவிடவேண்டும். அரசு திட்டத்தை கைவி–டாவிட்டால், திட்டத்தை கைவிட வைக்க அதிமுக போராடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×