என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Contract workers struggle"
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, போனசை வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் இன்று காலை அனல்மின் நிலைய 1-வது நிலை வாயில் அருகே நூதனமாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைககளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சி.ஐ.டி.யூ. செயலாளர் சுந்தரம், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி உள்படஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின் நிலைய தலைவர் வெங்கட்டையன் கூறும் போது, “ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வருகிற 16-ந்தேதி குறளகத்தில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் உடன்பாடு ஏற்பட வில்லை எனில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்” என்றார். #ThermalPowerStation
ஆவடி நகராட்சியில் துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 425 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுபற்றி நகராட்சி கமிஷனர், சுகாதார அலுவலரிடம் ஒப்பந்த் தொழிலாளர்கள் முறையிட்டனர். எனினும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதார அலுவலர் மொய்தீன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்