என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona virus"

    • பிஎப்.7 வகை தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
    • மாதிரிகள் மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆக்ரா:

    ஒமைக்ரான் கொரோனா தொற்றின் உருமாற்றமாக பிஎப்.7 வகை கொரோனா கருதப்படுகிறது. இது தற்போது சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி சீனாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா வந்த 40 வயதான நபருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தனியார் ஆய்வக பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் ஆய்வின் முடிவில் அந்த நபர் பிஎப்.7 ரக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும்.

    • பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
    • கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.

    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரானின் மரபணு மாற்றம் அடைந்த 'பி.எப்.7' வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பலர் சென்னையில் இயல்பாக சுற்றித் திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிவதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஓட்டல்கள், கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

    பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்களும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்படுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடனே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.

    புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் முக்கிய நகரங்களில் சிட்னியும் ஒன்றாகும். மேலும் அதன் சின்னமான ஓபரா ஹவுஸில் பொது கவுண்ட்டவுன் மற்றும் வானவேடிக்கைகள் உலகம் முழுவதும் பெரும் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கும்.

    இதனால் சிட்னிக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிட்னியின் துறைமுகத்திற்கு வந்து வானவேடிக்கைகளைக் காண்பார் எகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி ஓபரா ஹவுஸின் நான்கு படகுகளில் இருந்து 2,000 வானவேடிக்கைகளும், சிட்னி துறைமுகப் பாலத்தில் முன்பை விட அதிகமான நிலைகளில் இருந்து 7,000 பட்டாசுகளும் ஏவப்பட்டு சிட்னி துறைமுகத்தை ஒளிரச் செய்யும்.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்பட்டு, கண்கவர் நிகழ்ச்சியை வடிவமைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    தொற்றுநோய்க்கு முன்னர், உலகின் பிற பகுதிகளிலிருந்து ஒரு பில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்ததால், சிட்னி மைதானத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விழாக்களில் கலந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

    • சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்.

    ======================

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்று தெரிவித்திருந்தார்.

    அதன்படி, சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    • உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது.
    • உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    பீஜிங்:

    புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    புது வகை கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. சீனா கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது. அனைவரும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    லண்டன்:

    சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இங்கிலாந்தும் கட்டுபாடு விதித்து இருந்தது. சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

    ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கொரோனா உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நிலையில், அவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.
    • சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.

    இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. புதுவையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவையில் நேற்று பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவையில் கடந்த நவம்பர் 27-ந் தேதி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் பொது இடங்களில் முக கவசம் அணிய புதுவை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாய் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என கொரோனா பாதிப்பு இருந்தது.

    நேற்று 680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுவையில் 2, காரைக்காலில் 2,ஏனாமில் ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வீடுகளில் 20 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உருமாறிய கொரோனா பாதிப்பு புதுவையில் இல்லை. போதிய தடுப்பூசி உள்ளதால் விடுப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
    • புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் பெங்களூரு நகரில் 24 பேருக்கும், கோலாரில் 3 பேருக்கும், சித்ரதுர்கா, ஹாசன், மண்டியா, உடுப்பி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பெலகாவியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 309 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் ஒன்றுக்கும் கீழ் உள்ளது.

    சீனா, அமெரிக்காவில் வேகமாக பரவும் 'பி.எப்.-7' என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. அதாவது குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்திலும் ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அது 'எக்ஸ்.பி.பி.1.5' வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.

    இந்த தகவலை சுகாதாரத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
    • பெண் வீட்டில் தனிமைப்படுத்த ப்பட்டுள்ளார்.

    கோவை, -

    சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமானநிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கோவை சர்வதேச விமானநிலையத்திலும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமானநிலையத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 167 பயணிகளுடன் விமானம் வந்தது.இதில் வந்த சேலத்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதியானது.இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கடந்த 7-ந் தேதி கோவை வந்த விமான பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரேண்டம் முறையில் எடுக்கப்பட்ட சளி மாதிரியில் பீளமேட்டை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் எந்த வகை கொரோனா என்பது தெரிய வரும். அந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்த ப்பட்டுள்ளார்.

    • வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பியாங்யாங்:

    வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி ஆட்டிப்படைத்தது.

    பெரும்பாலான உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என கூறி வந்தது.

    ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை வடகொரியா உறுதி செய்ததது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளானதாக அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும் கொரோனாவை வென்றதாக ஆகஸ்டு மாதமே வடகொரியா அறிவித்தது.

    இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று பரவல் எழுச்சி பெறும் அபாயம் எழுந்துள்ளது.

    இதனையடுத்து, பியாங்யாங் முழுவதும் 5 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி பியாங்யாங்கில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளன.

    மேலும் ஒவ்வொரு நாளும் பல முறை உடல் வெப்பநிலையை பரிசோதித்து, அதன் விவரங்களை சுகாதார அதிகாரிகளிடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஊரடங்கு தொடர்பான அரசின் உத்தரவில் கொரோனா பரவல் குறித்து குறிப்பிடவில்லை என்றபோதும், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு கொரோனாவின் தாக்கமே காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

    இதைத்தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

    இந்த சூழலில் வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பியாங்யாங்கை தொடர்ந்து, வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×