search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "COURSE"

    • பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
    • வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடவளாகத்தில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. கல்லூரியில் பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று இருந்தது.

    நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

    பேராசிரியர்கள் ஆகாஷ், பாலு, முருகானந்தம், பாலாஜி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் தேவிகலா ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கே அமர வைத்து கல்லூரி நடைமுறை மற்றும் நல்லொழுக்க அறிவுரைகள் கூறப்பட்டன.

    மாணவ-மாணவிகள் தங்கள் பகுதியிலேயே கல்லூரி அமைவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி புதிய பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பிக்க அடுத்த மாதம் 11-ந்தேதி கடைசி நாள்

    கரூர், ஜூன்.28-

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்து, அவர்கள் திருச்சிராப்பள்ளி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணக்கர்களுக்கான கல்விக் கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.

    இந்த கட்டணமில்லாக் கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு ஒன்றை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை,

    அலகு இரண்டை சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் தகுதியுடையவர்களாவர். 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பயிற்சி பெற விருப்பமுள்ள மாணாக்கர்கள் விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1 மற்றும் மொண்டிப்பட்டி அலகு இரண்டு ஆகிய அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்குள் சேர்ப்பிக்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

    ×